Pages

Monday, August 7, 2017

அதிரை ரயில் நிலையம் அருகே தேங்கும் சாக்கடை கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் !

அதிராம்பட்டினம், ஆக. 07
அதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே தேங்கும் குடியிருப்பு கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கலக்கம். மாற்றுப்பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட கடற்கரைத்தெரு பகுதி குடியிருப்பு கழிவுநீர் ரயில் நிலையம் செல்லும் பாதை வழியே வடிகால் அமைக்கப்பட்டு சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணி சுமார் ரூ.3.5 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில், கழிவுநீர் தேங்கிய ரயில்வே இடத்தில் மண் நிரப்பப்பட்டதால் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் வடிகாலில் தேங்கிக்காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதாகவும், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். வடிகால் கழிவு நீர் மாற்றுப்பாதையில் செல்ல அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...