Pages

Wednesday, August 9, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் இரத்த வகை கண்டறியும் முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், தன்னார்வ இரத்த கொடையாளர்கள் அமைப்பு, தஞ்சாவூர் காளி இரத்த வங்கி ஆகியோர் இணைந்து இரத்த வகை கண்டறியும் முகாம் கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்துப் பேசினார். தஞ்சாவூர் காளி இரத்த வங்கி ஆய்வகக் குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு இரத்த வகை சோதனையை மேற்கொண்டனர்.

முகாம் ஏற்பாட்டினை கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் மேஜர் பி. கணபதி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கே. முத்துகுமாரவேல் எம் பழனிவேல், எஸ். சாபிரா பேகம், என்.சேகர் ஆகியோர் செய்தனர்.

இம்முகாமில் கல்லூரி பேராசிரியர்கள் என். ஜெயவீரன், லெனின், குமாராசாமி, கலீல் ரஹ்மான், ரவிந்திரன், கே.செய்யது அகமது கபீர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முகாமில் மாணவ, மாணவிகள் 325 பேர் கலந்து கொண்டு இரத்த வகை கண்டறிந்தனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...