Pages

Monday, August 7, 2017

காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தி, நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு வழங்க ஆட்சியர் அறிவுறுத்தல் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு மற்றும் கொள்ளைநோய் தடுப்பு தொடர்பான உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (07.08.2017) திங்கட்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
ஏடீஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களான தண்ணீர் சேமிக்கும்  தொட்டி பாரல்கள் போன்றவற்றை வாரம் இருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும். வீட்டைசுற்றி தேவையில்லாமல் இருக்கும் கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் டப்பாக்கள், டயர்கள், மண்பானைகள் போன்றவற்றை அப்புறபடுத்தவேண்டும்.

டெங்கு பாதிக்கப்பட்ட கிராமங்களில்  சிறப்பு கவனம் செலுத்தி ஒட்டுமொத்த சுத்தம் செய்யும்பணியினை மேற்கொள்ளவேண்டும்.
கல்வெட்டுகளுக்கு கீழ் உள்ள சாக்கடையில் தேணு;கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி சாக்கடைநீர் வழிந்தோடிடும்படி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

மழைநீர் வடிகால் உரிய முறையில் துர்வாரப்பட வேண்டும். அப்பகுதியில் கிராம தூய்மை காவலர்களை பயன்படுத்தி துப்புரவு பணியினை மேற்கொள்ளவேண்டும்.

கொசுப்புழு ஒழிப்பு மருந்து மற்றும் கொசு ஒழிப்பு புகைமருந்து அடிக்கும் பணியினை மேற்கொள்ளும் சுகாதார பணியாளர்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீரினை (0.2 PPM)  பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவேண்டும்.

காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். முகாமில் அனைத்து மக்களுக்கும் இரத்த வெள்ளையனுக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்கப்பட வேண்டும்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் சுப்ரமணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன், மாவட்ட மலேரியா அலுவலர் டாக்டர் போத்தி பிள்ளை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துணை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...