Pages

Wednesday, August 16, 2017

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியாவின் 71 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முஹம்மது முகைதீன் தலைமை வகித்து, இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் சுதந்திர தின பேருரை நிகழ்த்தினார்.

விழாவில் லயன்ஸ் சங்க செயலர் அப்துல் ரஹ்மான், பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, வட்டார வளர்ச்சிக் குழு தலைவர் செல்வராஜ், முன்னாள் தலைவர் ஆறுமுகச்சாமி, பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளரும், முன்னாள் தலைமை ஆசிரியருமாகிய எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், பள்ளி கல்விக்குழு முன்னாள் தலைவர் முஹம்மது செரீப், முஹம்மது இப்ராஹீம், பெற்றோர் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள் முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் முஹம்மது ஹனீபா, வழக்கறிஞர் அப்துல் முனாப், நிருபர் சாகுல் ஹமீது, அப்துல் மாலிக், ஜமால் முஹம்மது, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...