Pages

Sunday, September 10, 2017

ரோஹிங்கிய போராளிகள் 1 மாதம் சண்டை நிறுத்தம் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: செப்.10
மியான்மரின் அரக்கான் (ராக்கீன்) மாநிலத்தில் வாழும் ரோஹிங்கிய முஸ்லீம்களின் கடந்த 70 ஆண்டுத் துயரம் தற்போது சகிக்க முடியாத மிக மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளதை அனைவரும் அறிவோம்.

ஆங்கிலேயர் காலத்திலும் அதற்கு முன்பும் தனிநாடாக இருந்த அரக்கான் (ராக்கீன்) பர்மாவின் பிடிக்குள் சிக்கியவுடன் சொல்லெணாத் துயரத்தை நித்தமும் சந்தித்து வருகிறது. 1946ல் மிர்காசிம் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒற்றை போராளிகள் குழு வழமைபோல் தற்போது 12 பிரிவுகளாக பிரிந்து போராடி வருகின்றனர்.

தற்போது மியான்மர் அரசு மற்றும் அதன் மக்களால் நடத்தப்பட்டு வரும் ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு எதிரான இனஅழிப்பு வன்முறையை எதிர்த்து போரிட்டு வரும் போராளிகள் குழு தாமாக முன்வந்து ஒரு மாத சண்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரோஹிங்கிய மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் ஓரளவு சென்று சேரும் என எதிர்பார்ப்பதாகவும் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், பர்மாவின் (மியான்மார்) புதிய வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோருக்குப் பின் எஞ்சிய சுமார் 3 லட்சம் அகதிகள் பங்களாதேஷ் நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ராக்கீன் மாநிலத்திற்குள் பாதுகாப்பு வளையம் (War Free Zone) ஒன்றை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும் என பங்களாதேஷ் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தகவலுக்காக, நம் தமிழகத்தின் பல நகரங்களிலும் பர்மா பஜார் என்ற பெயரிலும், பர்மா காலனி என்ற பெயரிலும் இயங்குவதை அவதானித்திருப்பீர்கள். பர்மாவிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு வந்த தமிழக வணிகர்களுக்காக அன்றைய தமிழக அரசால் ஏற்படுத்தி தரப்பட்ட மாற்று ஏற்பாடுகளே இவை. பர்மாவின் சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட பர்மிய அரசு பிற இன மக்களை துரத்தியடிக்கும் வேலைகளை அன்றே துவங்கிவிட்டனர் எனவே இது புதிதல்ல.

இன்னும் கூட பல தமிழர்கள் பர்மிய எல்லையை ஒட்டிய இந்தியாவின் வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் வாழ்ந்தும் வருகின்றனர் ஆனால் பல லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்கள் இடம் பெயர்ந்தும், உயிர் உடமைகளை துறந்தும் கூட பர்மியர்களால் அவர்களை முழுமையாக அழித்தொழிக்க முடியவில்லை என்பதே பவுத்த அரக்கர்களின் அழிவு வெகுதொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது..

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...