Pages

Wednesday, September 20, 2017

உலகில் 100 வயதைக் கடந்த 25 பேர் பற்றிய சிறப்புப் பார்வை (படங்கள்)

அதிரை நியூஸ்: செப். 20
உலக வாழ்வில் நம்முடைய காலத்தில் 100 வயதுக்கு மேல் வாழ்ந்து மரணித்த, இன்னும் வாழ்ந்து வருகின்ற 25 பேரைப் பற்றிய சிறு விபரங்கள்...

1. வயலெட் பிரவுன் (117 வருடங்கள் 189 நாட்கள்) ஜமைக்கா 1900 மார்ச் 10 முதல் 2017 செப்டம்பர் 15 வரை
உலகின் வயதான பெண்மணி என்ற பட்டத்துடன் கடந்த வாரம் மரணித்தார். தனது நீண்டவாழ்வின் ரகசியமாக பன்றி, கோழி இறைச்சி உண்ணாதது மற்றும் ரம் போன்ற மதுபானங்களை அருந்தது என குறிப்பிட்டிருந்தார்.

2. ஹோனொரின் ரோன்டெல்லோ * (1903 ஜூலை 28) பிரான்ஸ்
இன்னும் வாழ்ந்து வரும் இவர் தனது 14 வயதில் வேலைக்குச் செல்லத்துவங்கி தனது 73 ஆம் வயதில் ஓய்வு பெற்றார். தனது நீண்டவாழ்வின் ரகசியம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளார்.

3. ராபர்ட் வெயிட்டன் * (1908 மார்ச் 29) யு.கே (இங்கிலாந்து)
7 ஆம் எட்வர்டு மன்னர் ஆட்சிகாலத்தில் பிறந்தவருக்கு தற்போது 10 பேரப்பிள்ளைகளும் (Grand Children), 25 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் (Great Grand Children) உள்ளனர். தனது நீண்ட ஆயுளின் ரகசியமாக ஏதோ ஒன்று இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
4. சப்பர்மான் சோடிமெஜோ என்கிற எம்பாஹ் கோத்தோ (Mbah Gotho) (146 வருடங்கள் 120 நாட்கள்) - 1870 டிசம்பர் 31 முதல் 2017 ஏப்ரல் 30 வரை – சென்ட்ரல் ஜாவா - இந்தோனேஷியா

5. ஜீன் கால்மென்ட் (122 வருடங்கள் 163 நாட்கள்) 1875 பிப்ரவரி 21 முதல் 1997 ஆகஸ்ட் 4 வரை - பிரான்ஸ்
CNN அறிக்கையின்படி இவர் ஆலிவ் ஆயில் டயட் உணவுகளை உண்டும் நகைச்சுவை உணர்வு மிகுந்தவராகவும் இருந்துள்ளார்.

6. சாரா க்னாஸ் (119 வருடங்கள் 97 நாட்கள்) 1880 செப்டம்பர் 24 முதல் 1999 டிசம்பர் 30 வரை - யு.எஸ் (அமெரிக்கா)
இவர் இறந்தபோது இவருடைய மகள் கேத்ரீன் சுல்லிவான் 96 வயதில் வாழ்ந்து வந்தார்.

7. மேரி லூயிஸி பெப்ரோனி முல்லர் (117 வருடங்கள் 230 நாட்கள்) 1880 ஆகஸ்ட் 29 முதல் 1998 ஏப்ரல் 14 வரை - கனடா
8. மிஸாவோ ஓகாவா (117 வருடங்கள் 27 நாட்கள்) 1898 மார்ச் 5 முதல் 2015 ஏப்ரல் 1 வரை - ஜப்பான்
சுசி (Sushi) என்ற ஜப்பானிய உணவும் தினமும் 8 மணிநேரம் தவறாமல் உறங்கி ஓய்வெடுப்பதுமே அதிகநாள் வாழ்ந்ததற்கு காரணமாக நம்பியவர்.

9. மரியா கபோவில்லா (116 வருடங்கள் 347 நாட்கள்) 1889 செப்டம்பர் 14 முதல் 2006 ஆகஸ்ட் 26 வரை - ஈக்குவேடார்

கழுதைப்பால் குடித்து வந்ததே இவரது நீண்ட ஆயுளின் ரகசியம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். (நெசமா இருக்குமோ?)

10. சுசன்னா முஷாத் ஜோன்ஸ் (116 வருடங்கள் 311 நாட்கள்) 1899 ஜூலை 6 முதல் 2016 மே 12 வரை - யு.எஸ்

19 ஆம் நூற்றாண்டில் பிறந்த அமெரிக்கர்களில் ஆகக்கடைசியாக மரணித்தவர் இவரே. இவரது வாழ்வின் ரகசியம் புகை பிடிக்காதது மற்றும் அருமையான இரவுத்தூக்கம் ஆகியவையாக இருக்கலாம் என்ற நம்பிக்கை.

11. கெர்ட்ரூடு வீவர் (116 வருடங்கள் 176 நாட்கள்) 1898 ஜூலை 4 முதல் 2015 ஏப்ரல் 6 வரை - யு.எஸ்

12. எலிஸாபெத் போல்டன் (116 வருடங்கள் 118 நாட்கள்) 1890 ஆகஸ்ட் 15 முதல் 2006 டிசம்பர் 11 வரை - யு.எஸ்
இவர் வாழும் போது சுமார் 500க்கு மேற்பட்ட வாரிசுகளை கண்டவர். 40 பேரன் பேத்திகள் (Grand Children), 75 கொள்ளு பேரன் பேத்திகள் (Great Grand Children), 150 எள்ளுப் பேரன் பேத்திகள் (Great Great Grand Children), 220 எள்ளுப் பேரர்களின் வாரிசுகள் (Great Great Great Grand Children), 75 எள்ளுப் பேரர்களின் வாரிசுகளின் வாரிசுகள் (Great Great Great Great Grand Children) என பார்த்தவர் (வாவ்!). அவரது ஆயுளின் ரகசியத்தை பற்றி கேட்டபோது 'அது எனக்குத் தெரியாது' என்று சொன்னார்.

13. எம்மா மார்டினா லூகியா மொரானோ (117 வருடங்கள் 137 நாட்கள்) 1899 நவம்பர் 29 முதல் 2017 ஏப்ரல் 15 வரை - இத்தாலி
தள்ளாத வயதில் நாளொன்றுக்கு 2 பச்சை முட்டைகள் மற்றும் ஒரு சில பிஸ்கட்டுகளை மட்டுமே உண்டு வந்தார். இவருடைய சகோதரி ஏஞ்சலா மோரானோ 102 வயது வரை வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

14. பெஸ்ஸி கூப்பர் (116 வருடங்கள் 100 நாட்கள்) 1896 ஆகஸ்ட் 26 முதல் 2012 டிசம்பர் 4 வரை - யு.எஸ்
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதையும் கண்ட உணவையும் சாப்பிடாமல் தவிர்ப்பதையும் ஆயுளின் ரகசியமாக சொல்கிறார்.

15. ஜிரோய்மோன் கிமுரா (116 வருடங்கள் 54 நாட்கள்) 1897 ஏப்ரல் 19 முதல் 2013 ஜூன் 13 வரை - ஜப்பான்
கொஞ்சமாக சாப்பிடுவேன் மத்ததெல்லாம் மேலே உள்ள கடவுள் பாத்துப்பாருங்க... என்று சொன்னார்.

16. ஜிராலியன் டால்லி (116 வருடங்கள் 25 நாட்கள்)1899 மே 23 முதல் 2015 ஜூன் 17 வரை - யு.எஸ்
17. கிரிஸ்டியன் மோர்டன்ஸன் (115 வருடங்கள் 252 நாட்கள்) - யு.எஸ்
நண்பர்கள், நல்ல சுருட்டு?, அதிகம் நன்னீர் குடித்தல், மது அருந்தாமை, உயர்வான எண்ணம், பாட்டுப் பாடுதல் போன்றவையே ஆயுளை நீட்டியிருக்கலாம் என நம்பினார்.

18. டினா மான்பிரண்டினி (115 வருடங்கள் 242 நாட்கள்)1897 ஏப்ரல் 19 முதல் 2012 டிசம்பா 17 வரை - யு.எஸ்
19. எட்னா பார்க்கர் (115 வருடங்கள் 220 நாட்கள்)1893 ஏப்ரல் 20 முதல் 2008 நவம்பர் 26 வரை - யு.எஸ்
நோயற்ற வாழ்வுடன் 113 வயது வரை நன்கு ஆரோக்கியத்துடன் நடமாடியுள்ளார்.

20. பெர்னீஸ் மடிகான் (115 வருடங்கள் 163 நாட்கள்)1899 ஜூலை 24 முதல் 2015 ஜனவரி 3 வரை - யு.எஸ்
குழந்தைகளும் இல்லை (?) மன உளச்சலும் இல்லை, தினமும் 1 கரண்டி தேன் ஆகியவையே நீடித்த வாழ்வின் காரணமாக இருக்கலாம் என நவின்றுள்ளார்.

21. கெர்ட்ரூடு பைன்ஸ் (115 வருடங்கள் 158 நாட்கள்) 1894 ஏப்ரல் 6 முதல் 2009 செப்டம்பர் 11 வரை - யு.எஸ்
அதிக வயது வாழ்ந்த கடைசி ஆப்ரிக்க வம்சாவளி அமெரிக்கர். என்னுடைய நீண்ட வாழ்வின் ரகசியத்தை கடவுளிடம் கேளுங்கள் என நச்சென்று பதிலளித்தவர்.

22. இஸ்ரேல் கிறிஸ்டல் (113 வருடங்கள் 330 நாட்கள்)1903 செப்டம்பர் 15 முதல் 2017 ஆகஸ்ட் 17 வரை - ஆக்கிரமிப்பு இஸ்ரேல்
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரிலும், ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் (Holocaust) எனும் யூத இனப்படுகொலையிலிருந்தும் தப்பி பிழைத்தவர். என் நீண்ட ஆயுளின் ரகசியத்தை அறிந்தவன் கடவுள் ஓருவனே என்று பதிலளித்துள்ளார்.

23. சகாரி மொமொய் (112 வருடங்கள் 152 நாட்கள்) 1903 பிப்ரவரி 5 முதல் 2015 ஜூலை 7 வரை - ஜப்பான்
ரைட் சகோதரர்கள் (Wright Brothers) முதலாவது இயங்கும் விமானத்தை (1st powered flight) கண்டுபிடித்த ஆண்டில் பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் முடியும் போது இவரது வயது 42. ஆரோக்கியமான உணவு சூப்பரான தூக்கமே காரணம் என்கிறார்.

24. யாசுதரோ கொய்டே (112 வருடங்கள் 312 நாட்கள்) 1903 மார்ச் 13 முதல் 2016 ஜனவரி 19 வரை - ஜப்பான்
புகை, மதுப் பழக்கம் இல்லாதது, டேக் இட் ஈஸி பாலிசி ஆகியவையே காரணமாக இருக்கலாம் என்றார்.

25. கிளாரே ஹோலிங்வொர்த் (105 வருடங்கள் 90 நாட்கள்) 1911 அக்டோபர் 10 முதல் 2017 ஜனவரி 10 வரை - யு.கே
இரண்டாம் உலகப்போர் குறித்த செய்திகளை சுடச்சுட 'தி டெய்லி டெலிகிராப்' பத்திரிக்கையில் தந்த பிரிட்டீஷ் பத்திரிக்கையாளர். ஹிட்லரின் ஜெர்மனி போலாந்து நாட்டை ஆக்கிரமித்ததை கண்ணால் கண்டும் போலாந்து எல்லையில் குவிக்கப்பட்டிருந்த ஜெர்மனியின் படை பலத்தை பற்றியும் எழுதியதன் மூலமே பிரிட்டீஷ் அரசு முதன்முதலாக ஆக்கிரமிப்பு செய்தியை அறிந்து கொண்டது. பின்னாளில் பாலஸ்தீன், அல்ஜீரியா, ஏடன், சீனா மற்றும் வியட்னாம் போர்கள் பற்றியும் எழுதியுள்ளார்.

Source: Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...