Pages

Saturday, September 2, 2017

திறமைகள் தூங்கினால் தரைகளே வெடிக்கும் !

கண்டதும் கேட்டதும் துடிக்குதே மனமே !
கதறிடும் பச்சிளம் குழந்தையும் ஜனமே !
அண்டை வீட்டிலே அழுகுரல் கேட்டால்...
அமைதியை இழந்திடும் மனிதனின் குணத்தில் !
கொண்டிடும் கொலைவெறி கண்டது என்ன ?
கொடுமைகள் ரசிப்பதில் மனிதமும் பின்ன !
சண்டைகள் தினமுமே வாழ்வினில்  என்றால்
சகிக்குமா ! உலகமும் கவலையை தின்றே !

மொஹிங்கா முஸ்லிமில் அமைதியை குலைத்தே
முகர்ந்திடும் பர்மிய குணமதை அழித்தே
அகிம்சை நிலையதை களைத்திடு உலகே
ஐக்கிய சபையிலும் குரலிடு பலமாய் !
தகித்திடும் தலைமையை வளர்ப்பதில் போனால்
தாங்கிடும் பூமியும் தடத்தினில் கோணும் !
சகித்திட முடியுமா இன்னமும் கொலைகள் !
சாவியை திறந்ததே துருக்கியின் தலைமை

காலிலே முள்ளது குத்திட வலிக்கும்
கண்ணது கலங்கிடும் மனம்தனில் கலக்கும்
தாலியை பிடித்திட பெண்ணது துடிக்கும்
தாங்கிட முடியவில் லைகொடுமை யார்க்கும்
வேலிகள் போட்டுதான் வெறியதை காட்டும்
விந்தைகள் விதையிலே கிள்ளிட வேண்டும்
கூலிகள் செயலிலே தலைவனே தெரியும்
கொடுக்கதை பிடுங்கிட அமைதியே நிலவும்

அக்கமும் பக்கமும் அழுகுரல் கேட்கின்
அமைதியும் கலைந்திடும் அவனியில் வழக்கில்...
எக்கண முமிதுவே ஆகிடின் என்கின் !
எப்படி இயலும் இதயமும் நொறுங்கி ?
சிக்கிடும் இனங்களை காப்பதும் கடமை
சிறத்தினை எடுத்திடு மனிதமே உடனே !
திக்கெலாம் திறண்டிடு கருணைதான் துடிக்கும்
திறமைகள் தூங்கினால் தரைகளே வெடிக்கும்

உன்னிலும் உள்ளதே அவனிலும் காணேன்
உண்மையை உணர்ந்திட வேண்டுமே பேனேன்
என்னதான் அடைந்திட போகிறாய் இங்கு ?
எதைத்தான் தெரிந்தாய் பௌத்ததில் அங்கே ?
சொன்னநற் போதனை அமைதியின் உருவம்
சுகமதும் கொலைதனில் கண்டிடு(தே) மிருகம் !
தன்னைபோல் அவர்களை உணர்ந்திடா  ஒழிப்பின்
தரணியில் பிரலயம் வருமதில் அழிவாய் !

திறண்டிட மலேசியா இந்தொனி சியாவும்
திக்கினில் பங்களா தேசுமே புயலாய்
உறங்கிடும் உலகினில் மனிதமை எழுப்பி
ஓடிடும் துரோகிகள் விடாமலே இழுத்தே
மறக்கனும் இனியுமே கொடுமையைச் செய்ய
மனிதமும் தழைக்கனும் மறுபடி மெய்யாய்
துறக்கனும் தூண்டுவர் மனதினில்
இவைகள்
துயரமும் தொடர்வதும் ஒழிந்திடும் உலகில் !

ஷேக் அப்துல்லாஹ். அ

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...