Pages

Tuesday, September 5, 2017

'மஸ்ஜீது-ல்-ஹுதா' இறை இல்லத்தின் எழில் மிகு தோற்றம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், நெசவுத்தெரு மஹல்லாவில் புதிதாக இறை இல்லம் கட்டிமுடிக்க வேண்டும் என்ற விருப்பம் நீண்ட காலமாக அப்பகுதியினரின் ஆள்மனதில் இருந்து வந்தது. இதற்கான முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த மஹல்லா நிர்வாகிகள் மற்றும் நெசவுத்தெரு அமீரக அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டதன் அடிப்படையில், முதல் முயற்சியாக, நெசவுத்தெரு ஜமாத்தார்கள் கடந்த [ 07-08-2015 ] அன்று மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் ஒன்றுகூடி இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கம் அமைந்துள்ள மேற்குப் பகுதியில் ( நோன்பு கஞ்சி காய்ச்சி விநியோகிக்கும் இடத்தில் ) புதிதாக இறை இல்லம் ஒன்றைக் கட்டி எழுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன் பின்னர், கடந்த 02-09-2015 அன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், புதிதாக கட்ட உள்ள இறை இல்லத்திற்கு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' என்ற பெயர் சூட்டுவது என முடிவு செய்தனர். மேலும் கட்டுமானப் பணிக்கு புதிதாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், இதன் தொடக்க விழா நிகழ்ச்சி நாளை மறுதினம் (07-09-2017) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில்.இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு சொற்பொழிவு ஆற்ற உள்ளனர். இந்நிகழ்ச்சியில், அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு, நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், இறை இல்லத்தில், பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நாளை ( 06-09-2017 ) புதன்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மவ்லவி ஹைதர் அலி கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்ற உள்ளார். ஜொலிக்கும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இறை இல்லத்தை பெண்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இறை இல்லத்தின் சிறப்பு அம்சங்கள்:
1. அதிரையின் பாரம்பரியமிக்க சங்கமாக கருதப்படும், 1913 ம் ஆண்டு முதல், நூறாண்டுகளைக் கடந்து இயங்கி வரும், மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கம் அமைந்துள்ள பகுதியை ஒட்டி இறை இல்லம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2. சுமார் 250 பேர் வரை தொழுகை மேற்கொள்ள தரை தளம் மற்றும் முதல் தளம் ஆகிய 2 தளங்களை பெற்றுள்ளது.

3. இடப் பற்றாக்குறையைப் போக்க, இறை இல்லத்தையொட்டி கீழ்புறத்தில் அமைந்துள்ள விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சங்க வளாகம் மற்றும் அதன் மேல் தளம் ஆகியவற்றில் கூடுதலாக சுமார் 300 தொழுகையாளிகள் வரை தொழும் வசதி.

4. பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக நவீன கழிப்பறைகள், ஒழு எடுத்துக்க்கொள்ளும் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

5. பெண்கள் தொழுகைக்கு தனியிட வசதி.

6. பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 4.30 மணியளவில் ( அஸ்ர் தொழுகைக்குப் பிறகு ) வழக்கமாக நடைபெறும் பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

1 comment:

  1. அல்ஹம்துலில்லாஹ், எங்களின் நீண்ட நாள் கனவு இன்று நிறைவடைந்த நிலையில்

    ஜஜாக்கல்லாஹ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...