Pages

Saturday, September 16, 2017

காட்டுப்பள்ளித் திடலில் புதிதாக வாரச்சந்தை திறப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளித் திடலில் புதிதாக வாரச்சந்தை இன்று சனிக்கிழமை மாலை திறக்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக அதிரை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் என்.ஏ முகமது யூசுப் கலந்துகொண்டு வாரச்சந்தை விற்பனையை தொடங்கி வைத்தார்.

வாரச்சந்தை பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை நடைபெறும். இங்கு காய்கறிகள், பழங்கள், கருவாடு, வத்தல், மளிகைத்தூள் வகைகள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விலை மலிவாக கிடைப்பதால் பெண்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இரவு நேரத்தில் வியாபாரிகள் சார்பில் மின் விளக்கு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...