Pages

Sunday, September 10, 2017

அதிராம்பட்டினத்தில் பெருநாள் சந்திப்பு, சமூக நல்லிணக்க, கலந்துரையாடல் நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், செப். 10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈத் மிலன் கமிட்டி சார்பில், 5 ம் ஆண்டு பெருநாள் சந்திப்பு, சமூக நல்லிணக்க, கலந்துரையாடல் நிகழ்ச்சி, பட்டுக்கோட்டை சாலை லாவண்யா திருமண மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் மவ்லவி ஏ. ஹைதர் அலி பாகவி தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக கவிஞர். நந்தலாலா, குளச்சல் நூர் முஹம்மது ஆகியோர் கலந்துகொண்டு சமூக நல்லிணக்க விழா பேரூரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக பேராசிரியர் மவ்லவி. இத்ரீஸ் முஹம்மது வரவேற்றுப்பேசினார். வழக்கறிஞர் இசட். முகமது தம்பி நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கி, முடிவில் நன்றி கூறினார். விழாவில், அனைத்து சமூதாயத்தை சேர்ந்த பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழா துளிகள்:
1. விழாக் குழுவினர் சார்பில், விருந்தாளிகளுக்கு பேரீச்சம்பழம், குடிநீர் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

2. விழா நடைபெற்ற மண்டபப் பகுதி முழுவதும் சமூகத்திற்கு பயனளிக்கும் சிறந்த விழிப்புணர்வு வாசகங்கள், நீதி போதனைகள், குர்ஆன் ஹதீஸ் தமிழாக்கங்கள் அடங்கிய போஸ்ட்டர்கள் பார்வையாளர்கள் கண்ணில் படும்படி தொங்கவிடப்பட்டது.

3. விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர்களுக்கு துண்டு சீட்டு, எழுதுகோல் வழங்கி, நிகழ்ச்சி பற்றிய கருத்துகள் - ஆலோசனைகள் கோரப்பட்டது. விழா முடிவில், தங்களது கருத்துகளை பதிவு செய்து கருத்துப்பதிவு பெட்டியில் இட்டுச்சென்றனர்.

4. இஸ்லாமிய மார்க்கம் குறித்து எழும் கேள்விகளுக்கு விளக்கங்கள் மற்றும் புத்தகங்களை குழுவினர் வழங்கினார்கள். மேலும் குர்ஆன் தமிழாக்கமும் வழங்கப்பட்டது.

5. விழாவில், அதிரை ஈத் கமிட்டி குழுவினர் வெள்ளை நிறத்தில் ஒரே யூனிபார்ம் அணிந்து களப்பணியாற்றியது பார்ப்போர் அனைவரையும் கவர்ந்தது.

6. விழாவில் இஸ்லாமிய நண்பர்கள் லுஹர்த் (பகல்) தொழுகையை மண்டபத்தில் நடத்தினார்கள்.

7. விழா முடிவில், விருந்தாளிகளுக்கு பிரியாணி மற்றும் விஜிடேரியன் உணவு பரிமாறப்பட்டன.

8. அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழும் மக்களிடேயே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் சமூக ஒற்றுமையை பலப்படுத்தும் உன்னத நோக்கத்திற்காக கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக விழாக் கமிட்டியினர் தெரிவித்தனர்.

~ அபூ அஜீம்
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...