Pages

Monday, September 11, 2017

'மருத்துவ மாமணி' விருது பெற்ற டாக்டர் அப்துல் ஹக்கீமுக்கு வாழ்த்து !

அதிராம்பட்டினம், செப்.11
லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவர்கள் தின விழா தஞ்சையில் அண்மையில் நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சஙகம் பரிந்துரையின் பேரில், அதிராம்பட்டினம் பிரபல மருத்துவரும், தஞ்சை கேன்சர் சென்டர்- ஜீவா நூற்றாண்டு அறக்கட்டளை பொருளாளர் டாக்டர் அப்துல் ஹக்கீம் அவர்களுக்கு, லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் வீரபாண்டியன் அவர்களால் 'மருத்துவ மாமணி' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில்,  9 வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்ப்பட்ட மருத்துவர்களுக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் ஜலீலா முகம்மது முகைதீன் செயலாளர் சுப்பர் அப்துல் ரஹ்மான் பொருளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது மாவடட ஆளுநர் நிதி ஆலோசகர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், வட்டாரத்தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் ஆகியோர் கலந்து கொண்டு, மருத்துவர் அப்துல் ஹக்கீமுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

1 comment:

  1. வாழ்த்துக்கள் டாக்டர் நீங்க நல்ல இருக்கணும்னு வாழ்த்துறேன். காசு பணமே வாழ்கை என்றிர்க்கும் சமுதாயத்தில் சேவை மற்றும் அர்பணிப்பு என்று நீங்கள் ஆற்றி வரும் சேவை இறைவன் உங்களுக்கு இம்மை மறுமை இரண்டையும் வெற்றி அடைய செய்வானாக ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...