Pages

Sunday, September 24, 2017

அதிராம்பட்டினத்தில் TIYA புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க (TIYA) புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் சனிக்கிழமை மாலை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.எம்.கே தாஜுதீன், செயலர் ஜபருல்லா, பொருளாளர் பகுருதீன், அமீரகத் தலைவர் முகமது மாலிக், முன்னாள் தலைவர்கள் ஹாஜா, பி.ஜமாலுதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க அதிரை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்: எச். சபீர் அகமது
துணைத் தலைவர்: டி. அஸ்லம் செர்கான்
செயலர்: ஏ.ஆர் ஹாஜா அலாவுதீன்
துணைச் செயலர்: ஜே. சக்கீர் அகமது
பொருளாளர்: ஏ.ஆர் அப்துல் சலாம்

இணைச்செயலாளர்கள்:
அப்துல்லா, இர்பான், சிராஜுதீன், நாசர், முகமது இலியாஸ், அசார், ஆசிக், அப்துல் வஹாப், ஹாஜா முகைதீன், இம்ரான் கான்

புதிதாக தேர்வான TIYA அதிரை நிர்வாகிகளுக்கு தாஜுல் இஸ்லாம் சங்க தலைமை மற்றும் அமீரக நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...