Pages

Wednesday, October 4, 2017

துபையில் அக்.15 முதல் 2 முக்கிய நெடுஞ்சாலைகளில் புதிய வேகக்கட்டுப்பாடு அமல்!

அதிரை நியூஸ்: அக். 04
அமீரகத்தை ஒருங்கிணைக்கும் 2 பிரதான நெடுஞ்சாலைகளில் எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் குறைக்கப்பட்ட புதிய வேகக்கட்டுப்பாடு அமலாகிறது. இந்த புதிய வேகக்கட்டுப்பாடு துபை பிராந்தியங்கள் வழியாக செல்லும் அவ்விரு நெடுஞ்சாலை பகுதிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

எமிரேட்ஸ் ரோடு மற்றும் ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு ஆகிய நெடுஞ்சாலைகளில் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்லலாம், அதிகபட்ச கருணை வேகம் (Grace speed window) மணிக்கு 130 கி.மீக்கு மேல் செல்லும் போது ரேடார் கேமராக்களிலிலும், போக்குவரத்து போலீஸாரின் கண்ணிகளிலும் சிக்கி அபராதம் செலுத்த நேரிடும்.

தற்போது வரை மேற்படி நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்படும் வேகம் மணிக்கு 120 கி.மீ, அதிகபட்ச கருணை வேகம் மணிக்கு 140 கி.மீயாக இருந்து வருகிறது. மேற்படி சாலைகளில் நடைபெறும் 60% விபத்துக்களுக்கு அதிக வேகமும் ஒரு காரணமாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இரு சாலைகளிலும் கடந்த 2016 ஆம் ஆண்டின் துவக்கம் முதல் இதுவரை தலா 39 பேர் என சம அளவில் விபத்தில் மரணமடைந்துள்ளனர்.

போக்குவரத்து அபராதங்கள் மற்றும் சட்ட விபரங்களை அறிந்து கொள்ள கீழ்க்காணும் சுட்டிகளின் உட்சென்று அறிந்து கொள்ளலாம்.

motorists will be slapped with a Dh600 fine for exceeding the speed limit by 30 km/h, Dh700 for speeding by 40 km/h, and Dh1,000 if they drive 50 km/h over the speed limit. 

RTA officials expect the drop in speed limit to ensure greater safety on the roads and to help curb traffic violations.

Did you know that there are over 200 different fines you could get on the roads in the UAE? Find out what you have to pay for all traffic violations here.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...