Pages

Thursday, October 5, 2017

தலைமை ஆசிரியையிடம் 16 பவுன் சங்கிலி பறிப்பு !

பட்டுக்கோட்டை, அக்.05
பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டையில் தலைமையாசிரியையிடம் இன்று (அக் 05) அதிகாலையில் 16 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறை தேடி வருகிறது.

பட்டுக்கோட்டை வட்டம் பொன்னவராயன்கோட்டை உக்கடை வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு மகாத்மாகாந்தி சாலையில் குடியிருப்பவர் சம்பத் (வயது 47). இவர் பட்டுக்கோட்டை கிளை எல்ஐசி அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அருணா (வயது 42). இவர் பட்டுக்கோட்டை ஜெயாலயம் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக உள்ளார்.

இந்நிலையில் (அக். 05 ந்தேதி) வியாழக்கிழமை அதிகாலை சுமார் 4.30 மணி வாக்கில், அருணா வீட்டின் பின் கதவை திறந்து கொண்டு, கொல்லைப்புறத்தை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது பின்பக்க காம்பவுன்ட் சுவரை தாண்டிக் குதித்த, போர்வையால் உடலை மறைத்தபடி வந்த, சுமார் 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் கண் இமைக்கும் நேரத்தில் தலைமையாசிரியை அருணா அணிந்திருந்த 16 பவுன் எடையுள்ள 2 தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டாராம். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ 3 இலட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பத் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சம்பவ இடத்தை பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...