Pages

Tuesday, October 17, 2017

துபையில் சர்வதேச உணவு தினத்தையொட்டி 2 வது உணவு வங்கி திறப்பு !

அதிரை நியூஸ்: அக். 17
துபையில் சர்வதேச உணவு தினத்தையொட்டி 2வது உணவு வங்கி திறக்கப்பட்டது.

துபையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டு வரும் துபையின் முதலாவது உணவு வங்கியின் மூலம் சுமார் 6 மாத காலத்தில் 136 டன் உணவுகள் சேகரிக்கப்பட்டு அல்கோஸ் பகுதியில் தேவையுடைய வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவுகள் துபை மாநகரட்சியுடன் 13 ஹைப்பர் மார்க்கெட் தொடர் குழுமங்கள், உணவகங்கள் மற்றும் 3 தொண்டு நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஓப்பந்தத்தின் அடிப்படையில் உணவுகள்பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. நேற்று கடைபிடிக்கப்பட்ட சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு சுமார் 8,000 உணவு பார்சல்கள் விநியோகம் செய்யப்பட்டன.

இந்த முதலாவது உணவு வங்கியின் வெற்றியை தொடர்ந்து சர்வதேச உணவு தினமான நேற்று துபையின் 2வது உணவு வங்கி துபையில் இயங்கும் கனடியன் யூனிவர்சிட்டியின் அருகாமை பகுதியான அல் பதா (Al Bada) பகுதியில் திறக்கப்பட்டது.

இந்த 2வது உணவு வங்கி 'ஈஸா அல் குர்க் அறக்கட்டளையின்;' (Under the permanent sponsorship of Essa Al Gurg charity foundation) நிரந்தர அனுசரனையுடன் நடத்தப்படும். மேலும் விரைவில் ஈஸா அல் குர்க் அறக்கட்டளையின் சார்பாக துபையின் 3வது உணவு வங்கி அல் முஹைஸ்னா பகுதியில் திறக்கப்படவுள்ளது. அடுத்த வருடம் முதல் சர்வதேச அகதிகள் முகாம்கள் மற்றும் அண்டை ஏழை நாடுகளுக்கும் இந்த உணவு வங்கியின் சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.

மேலும் துபை முழுவதிலுமுள்ள தேர்வு செய்யப்பட்ட 80 மஸ்ஜிதுகளின் வாசலில் வைக்கப்பட்டுள்ள 100 குளிர் சாதனப்பெட்டிகளில் 'குளிர்சாதனப் பெட்டிகளை நிரப்புக' (Fill up the fridges initiative) என்ற அழைப்பின் கீழ் பொதுமக்கள் தேவையுடையோருக்காக உணவுகளை வைத்துச் செல்கின்றனர். இந்த குளிர்சாதனப் பெட்டிகள் உள்ள மஸ்ஜிதுகள் குறித்து விபரமறிய இந்த foodsafe.ae தளத்திற்கு சென்று பார்க்கலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...