Pages

Sunday, October 15, 2017

டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்த கடைகளுக்கு ரூ.23 ஆயிரம் அபாரதம் விதிப்பு !

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதற்கு
காரணமாக இருந்த வணிக வளாகக் கடைகளுக்கு ரூ.23 ஆயிரத்தை
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அபராதம் விதித்தார். அபராதத் தொகைகளை உடனடியாக வசூலிக்க மாநகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (15.10.2017) ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு 6 வணிக வளாகங்களில் சோதனை செய்யப்பட்டதில் கொசுப்புழுக்கள் இருப்பதை கண்டறிந்து 6 வணிக கடைகளுக்கு ரூ.23,000 அபராதம் விதித்தார். (3 உணவகத்திற்கு தலா ரூ.5,000,  டீக்கடைக்கு ரூ.5,000 மற்ற டீக்கடைக்கு ரூ.2,000 மற்றுமொரு டீக்கடைக்கு ரூ.1,000). மேல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாததால் அக்குடிநீர் தொண்டிகளை துண்டிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  அபராதம் விதிக்கப்பட்ட வணிக வளாக கடைகளுக்கு சுகாதாரமற்ற முறையில் இருப்பது கண்டறியப்பட்டால்ää கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

பின்னர், அரசு விரைவு பேருந்து பனிமனை பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு  செய்தார். அரசு விரைவு போக்குவரத்து கழக பயணிகள் காத்திருப்பு அறை, கழிவறைகள் ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து கரந்தை போக்குவரத்து டிப்போ அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றிடவும், கொடிமரத்துமூலை அகழியில் உள்ள குப்பைகள், முட்புதர்கள் சுத்தம் செய்ய மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தினார்.  மாநகராட்சி பகுதிகளில் 325 கூடுதல் பணியாளர்களை கொண்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலவீதி, மூலஆஞ்சயநேயர் கோவில் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், அதனையொட்டியுள்ள அகழிகளில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.  அவ்வாறே சீனிவாசபுரம், பாரதி நகர் குடியிருப்பு பகுதிகளிலும் டெங்க ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களிடம் 3 நாட்களுக்கு மேல் தண்ணீர் பிடித்து வைக்கக் கூடாது எனவும், பாத்திரங்களை முறையாக கழுவி குடிநீர் பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாநகராட்சி ஆணையர் வரதராஜ், செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ், திருமதி.முத்துலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

1 comment:

  1. டெங்கு விளிப்புணர்வு பரவட்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...