Pages

Wednesday, October 18, 2017

லக்கேஜ் இல்லா பயணத் திட்டம் ~ எதிஹாத் ஏர்வேஸின் புதிய முயற்சி !

அதிரை நியூஸ்: அக். 18
அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எதிஹாத் ஏர்வேஸ் நிறுவனம் அவ்வப்போது தனது சேவையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருவது அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தற்போது லக்கேஜ் இல்லா மலிவு விலை பயணத்தை சோதனை முயற்சியாக 2 தடங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆரம்பமாக அபுதாபி – பஹ்ரைன், அபுதாபி – குவைத் ஆகிய தடங்களில் துவக்கப்பட்டுள்ள இந்த மலிவு விலை டிக்கெட் சேவையில் 7 கிலோ கேபின் பேக்கேஜ் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர்.

இந்தத் திட்டதிற்கான டிக்கெட்டுகளை (இன்று) அக்டோபர் 18 முதல் டிசம்பர் 18 வரை முன்பதிவு செய்து கொண்டு எதிர்வரும் 2018 மார்ச் 31 ஆம் தேதிக்கள் பயணம் செய்து கொள்ளலாம்.

எதிஹாத் நிறுவனம் ஏற்கனவே கூடுதல் இடவசதியுடன் கூடிய இருக்கைகள் (கால்களை நீட்ட அதிக வசதி), விருப்பமான இருக்கைகள் முன்பதிவு, காலியான பக்கத்து இருக்கைகள் தேர்வு (இரு இருக்கைகளை ஒருவரே பதிவு செய்து கொள்வது) என பல்வேறு சோதனை முயற்சிகளை பயணிகளின் கருத்திற்கிணங்க செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...