Pages

Saturday, October 14, 2017

புதுமை பெறுமா? புதுப்பள்ளி குளம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளிவாசல் நிர்வாகப் பராமரிப்பில் இருந்து வருகிறது பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள புதுப்பள்ளி குளம். சுமார் 1 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இக்குளத்திற்கு நீர் ஆதாரமாக, சி.எம்.பி வாய்க்கால் மூலம் தவழ்ந்து வரும் ஆற்று நீர், அருகில் உள்ள செட்டியா குளத்தில் நீர் நிரம்பியவுடன்,  வழிந்தோடி, அதன் இணைப்பில் உள்ள புதுப்பள்ளி குளத்திற்கு வந்தடையும்.

ஒரு காலத்தில் பொதுமக்கள் ஆர்வமாக குளித்து மகிழ்ந்த இக்குளத்தில், தற்போது மழை நீரோடு, கழிவு நீர் நிரம்பி, பச்சை பாசிகள் படர்ந்து துர்நாற்றம் வீசிவருகிறது. இப்பகுதி வழியே செல்லும் ஆடு, மாடுகள் குளத்தில் தவறி விழுவதும், குளத்தில் குப்பைகள் கொட்டுவதும், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குளத்தில் கலப்பதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவருகிறது.

குளத்தில் சூழ்ந்துள்ள சேறு, சகதிகளை அகற்றி, குளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைத்து, மரங்கள், செடிகள் நட்டு, மின் விளக்குகள், குடிநீர் வசதி, நடைமேடை, படித்துறை ஆகியவற்றை அமைத்து புதுமை பெறுமா? புதுப்பள்ளிவாசல் குளம்... இதற்கான முயற்சியை முன்னெடுத்துச் செல்வார்களா? இப்பகுதி தன்னார்வலர்கள், கொடையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள்.

இன்று (அக்.14) சனிக்கிழமை காலை எடுக்கப்பட்ட புதுப்பள்ளி குளத்தின் படங்கள்...
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 comments:

  1. Very good decision to come forward this message and for the development of the best

    ReplyDelete
  2. ஊரும் உலகமும் மறந்துவிட்ட நிலையில் நினைத்துபார்த்த அதிரை நியூசுக்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...