Pages

Wednesday, October 4, 2017

சி.எம்.பி வாய்க்கால் சாலையோரக் கழிவுகள் அகற்றும் பணி தீவிரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், சி.எம்.பி வாய்க்கால் சாலையோரத்தில் குவிந்து காணப்படும் கழிவு மணலை ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

டி.என்.டி.ஜே அதிராம்பட்டினம் கிளை-2 சார்பில், அதன் தலைவர் பஜால் முகைதீன் தலைமையில், செயலர் எம்.ஐ அப்துல் ஜப்பார், பொருளாளர் சிராஜூதீன் ஆகியோர் கடந்த செப். 28 ந் தேதி, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷை நேரில் சந்தித்து, சி.எம்.பி வாய்க்கால் சாலையில் காணப்படும் கழிவுகளை அகற்றக்கோரி மனு அளித்தனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் சார்பில், சி.எம்.பி வாய்க்கால் சாலையோரத்தில் குவிந்து காணப்பட்ட கழிவு மணலை, ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியோடு அப்புறப்படுத்தும் பணி இன்று புதன்கிழமை தீவிரமாக நடைபெற்றது. கழிவுகளை பேரூராட்சி மினி டிப்பர் லாரி மூலம் எடுத்துச்சென்று வண்டிப்பேட்டை குப்பைக் கிடங்கின் தாழ்வான பகுதியில் கொட்டப்பட்டது.
 
 
 
 

5 comments:

  1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நண்பர்களும் பேருராச்சி பொறுப்பாலர்கலுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
    ஊரின் அக்கரையில் TNTJ

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Idhodu maelvattil congrete tagadu pottu underlay mud pipe pottu moods call a iraivan taufeeq seivaanaga.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...