Pages

Tuesday, October 10, 2017

தஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கண்காணிக்க குழு நியமனம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும்
டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெறுவதை கண்காணிக்க துணை ஆட்சியர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், வட்டாட்சியர்கள் ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டு தினமும் காலை 8.00 மணிக்கு டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெறுவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (10.10.2017) நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் அந்தந்த வட்டார அளவிலான வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், மண்டல அலுவலர்கள் போன்ற பணியாளர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று டெங்குகொசு ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.  கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் பை, தேங்காய் ஓடு, தேங்காய் மட்டை, பிளாஸ்டிக் கப், பழைய டயர், அம்மி கல், உரல் கல், வீடுகளில் உள்ள குளர்சாதன பெட்டி (Fridge) போன்றவற்றின் பொருட்களின் மூலம் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகின்றது. மேலும், வீடுகளில் உள்ள பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைக்கும் பொழுது மூடி வைக்க வேண்டும்.  மூன்று நாட்களுக்கு மேல் பாத்திரங்களை மூடி வைக்காமல் தண்ணீர் இருந்தால் நல்ல தண்ணீரில் கொசுப்புழு உற்பத்தியாகும். இதனை தவிர்க்க வேண்டும்.  அனைத்து அரசு அலுவலக வளாகங்கள், கட்டிடங்கள், மழை நீர் தேங்காத வண்ணம் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

வீடுகளையும், சுற்றுப்புறங்களையும், தெருக்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில்  ஈடுபடும் பணியாளர்களை கண்காணிக்க துணை ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஆகியோர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, இவர்கள் தினமும் காலை 8.00 மணி கண்காணிப்பு பணியில் ஈடுபட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...