Pages

Tuesday, October 10, 2017

அதிரையில் சிறுவர்களை கவரும் போந்தா கோழிக்குஞ்சுகள் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் விற்பனைக்கு வந்துள்ள போந்தா இன கோழிக்குஞ்சுகளை ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் பள்ளிச் சிறுவர்கள்.

இதுகுறித்து, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகே விற்பனை செய்துவரும் வியாபாரி பண்ரூட்டி ராஜா கூறியது;
'நாமக்கல் மாவட்டத்தில் இருந்து போந்தா இன கோழிக்குஞ்சுகள் மொத்தமாக வாங்கி வந்து, பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்கிறோம். குஞ்சுகளை, அட்டைப்பெட்டி மூலம் தடுப்பு வைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். குஞ்சுகளுக்கு உணவாக கம்பரிசியும், தண்ணீரும் கொடுக்கிறோம். ஒரு ஜோடி குஞ்சு ரூ. 20. நாள் ஒன்றுக்கு 100 முதல் குஞ்சுகள் வரை விற்பனை ஆகிறது. இவற்றை, பள்ளிச் சிறுவர்கள் ஆர்வமாக வாங்கிச்சென்று வீடுகளில் வளர்க்கின்றனர்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...