Pages

Tuesday, October 3, 2017

துபாயில் முப்பெரும் விழா ~ துரைமுருகன் பங்கேற்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: அக். 03
பிரபல 'தொழில் அதிபர்' பழஞ்சூர் K. செல்வம் ஏற்பாட்டின் பேரில், துபாய் பன்னாட்டு திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில், முப்பெரும் விழா துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளரும், துபாய் எவர்கோல்ட் நிறுவனருமாகிய பழஞ்சூர் K. செல்வம் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக, திமுக மாநில முதன்மைச் செயலரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமாகிய துரைமுருகன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு விழா பேருரை ஆற்றினார்.

விழாவில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில முதன்மைச் செயலரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம். அப்துல் ரஹ்மான், திமுக மாநில விவசாய அணி செயலர் ஏ.கே.எஸ் விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

தொடக்கத்தில், துபாய் எவர்கோல்ட் நிறுவன பொதுமேலாளர் எஸ். செய்யது இப்ராஹீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழா முடிவில் எவர்கோல்ட் நிறுவன மேலாளர் சுரேஷ் நன்றி கூறினார். இவ்விழாவில், துபாய் பன்னாட்டு திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, 'தொழில் அதிபர்' பழஞ்சூர் K. செல்வம் சார்பில், துபாய் விமான நிலையத்தில், திமுக மாநில முதன்மைச் செயலர் துரைமுருகனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், பழஞ்சூர் K. செல்வம் புதல்வர் எஸ்.விக்னேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...