Pages

Tuesday, October 17, 2017

அமீரக வானில் திடீர் மாயாஜாலம் நிகழ்த்தியது எது?

அதிரை நியூஸ்: அக். 17
நேற்று திங்கட்கிழமை மாலை சுமார் 7.28 மணியளவில் அமீரக வான்வெளியிலும் சில வளைகுடா நாடுகளிலும் வானத்தை கிழித்துக் கொண்டு செல்வதுபோல் ஓர் ஒளிவெள்ளம் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தது. ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு சென்றபின் அவை வெடித்து சிதறுவதாக காணப்பட்டாலும் தொடர்ந்து ஒரு பகுதி வானில் பயணம் செய்வதையும் காண முடிந்தது.

இந்த அரியக்காட்சியை கண்ணுற்றவர்கள் பலர் தங்களுடைய மொபைல் போன்களில் பதிவு செய்து வழமைபோல் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி பரப்பி வருகின்றனர். பறந்து சென்ற அந்த ஒளிவெள்ளம் என்ன? விண்கற்களா?  செயற்கை கோளா? அல்லது விண்மின்களா?  (வால் நட்சத்திரங்கள்) என்ற பலத்த ஆச்சரியம் நிலவி வருகின்ற நிலையில் பலதரப்பட்ட பதில்கள் கிடைத்து வருகின்றன.

அமெரிக்கா ராணுவத்தின் வான்வெளிப் போர்களுக்கான திட்டக்குழு, (US Strategic Command — in charge of the US nuclear, cyber and 'Star Wars' programme)  இது ரஷ்யாவின் (SL-4 R/B satellite) செயற்கோள் என்றும், அதன் கட்டளையில் ஏற்பட்ட சிறுதவறினால் மறுபடியும் பூமியின் சுற்றுப்பாதைக்குள் வந்து சென்றதாக விளக்கமளித்துள்ளது.

இந்த செயற்கைகோள் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பிகானீர் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது எனவும் கூடுதல் தகவல்கள் வெளியாகி இருந்தாலும் சிலர் இது விண்கற்கள் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் செயற்கை கோள்களையும், விண்கற்களையும், விண்மீன்களையும் கண்காணிக்கும் Satview, which tracks satellites என்ற தளம், மேலும் 3 விண்குப்பைகள் எதிர்வரும் அக்டோபர் 18 முதல் 27 ஆம் தேதிக்குள் பூமியின் புவியீர்ப்பு வட்டத்திற்குள் நுழையும் என்றும் முன்னறிவிப்பு செய்துள்ளது, நுழையும் விண்குப்பைகள் சம்பலாகிவிடும் என்பது தனிக்கதை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...