Pages

Monday, October 16, 2017

தஞ்சை சிவகங்கை பூங்கா மேற்பார்வையாளர் சஸ்பென்ட் ~ ஆட்சியர் அதிரடி (படங்கள்)

தஞ்சாவூர் மாநகராட்சி சிவகங்கை பூங்காவை முறையாக பராமரிக்காமல் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக காரணமாக இருந்த மேற்பார்வையாளர் தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை உத்தரவு பிறப்பித்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து சிவாஜி நகர், செவப்பநாயக்கன்வாரி, சீனிவாசபுரம் நடுத்தெரு, சிவகங்கை ப10ங்கா ஆகிய இடங்களில்   மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று  (16.10.2017) திங்கட்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட சிவாஜி நகரில் தனித்தனியாக ஒவ்வொரு வீட்டிலும்  ஆய்வு மேற்கொண்டு இரண்டு வீடுகளில் வீட்டின் பயன்பாட்டிற்காக டிரம் பிடித்து வைக்கப்பட்டுள்ள தண்ணிரீல் டெங்கு கொசு புழு கண்டறியப்பட்டதால், இரண்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.  ரயில்வே லையன் கீழ் உள்ள கழிவு நீர் கால்வாயினை முழுமையாக தண்ணீர் தேங்கா வண்ணம் தூர் வாரி சுத்தம் செய்ய மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். செவப்பன்நாயக்கன் வாரி சீனிவாசபுரம் நடுத்தெருவில் வீடுகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு வீட்டின் மருத்துவ கழிவு அதிக அளவில் காணப்பட்டதால், மாட்டுக் கொட்டகையில் பிடித்து வைக்கப்பட்டிருந்த நீரில் டெங்கு கொசு புழுக்கள் காணப்பட்டதாலும். வீட்டின் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

பின்னர் ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் குப்பை கிடங்கிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் முறையாக பராமரிக்க வேண்டுமெனவும், குப்பைகளை முறையாக தரம் பிரிக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி சிவகங்கை பூங்காவை ஆய்வு மேற்கொண்டு குடிநீர் தொட்டி, தண்ணீர் தொட்டி, நீர் தெளிப்பான், வெட்டப்பட்ட பழைய கட்டைகளில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பதை கண்டறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சிவகங்கை பூங்காவினை முறையாக பராமரிக்காத மாநகராட்சி பணியாளர் தற்காலிக பணியிட நீக்கம் செய்ய மாநகராட்சி உயர் அலுவலருக்கு  உத்தரவிட்டார். அரசு அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தினை தூய்மையாக பராமரிக்காத பட்சத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தினார்.
இதே போல் தஞ்சாவூர் ஒன்றியம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மற்றும் மாநகராட்சி 42வது வார்டு குழந்தையம்மாள் நகரில்,  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ந.சக்திவேல் அவர்கள், வீடுவீடாக சென்று டெங்கு ஒழிப்பு பணியினை மேற்கொண்டனர். குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் பொது மக்களிடம் டெங்கு ஒழிப்பு உறுதிமொழியினை மேற்கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தினை வழங்கினார். 
இவ்வாய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாநகராட்சி மருத்துவ அலுவலர் நமாச்சிவாயம், உதவி பொறியாளர் ரமேஷ், வட்டாட்சியர் தங்கபிரபாகரன், ரெட் கிராஸ் உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர்  கலந்து கொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...