Pages

Saturday, October 7, 2017

அதிரை பைத்துல்மால் குவைத் கிளை மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் (அக். 06) வெள்ளிக்கிழமை குவைத் சால்மியாவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் குவைத் கிளைத் தலைவர் ஜெய்னுல் ஹுசைன் தலைமை வகித்து பேசியது; 
'வழமையாக ஆதரவற்றோர் உதவித்திட்டம் (Pension), RD (Recurring Deposit), போன்றவற்றில் நம்மவர்களின் பங்களிப்புகளுக்குப்பின், அன்னதான திட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தவும், கழிப்பறை வசதிகள் இல்லாத வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கவும் அதன் அவசியத்தை வலியுறுத்தி பிற நாடுகளில் வசிக்கும் நல்லெண்ணம் கொண்டோரின் பங்களிப்புகளை வரவேற்கிறோம்' என்றார்.

ஒரு கழிப்பறை கட்ட வெறும் ரூ. 20,000/- போதும்.  இதனால் ஊரில் சுத்தம் பேணப்படுவதுடன் குடும்பப் பெண்களின் மானம் காப்பாற்றப்படுகிறது. பொருளுதவி செய்ய விரும்புபவர்கள் இஸ்மாயிலை +965 99298319 (WhatsApp), 66387938 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், "ஏழைக்கு ஒரு வேளை உணவளிப்பவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் உணவளிக்கிறான்" என்ற அண்ணல் நபி (ஸல்) வாக்குப்படி, அடுத்தவேளை பசிக்கு வழி இல்லாதவர்களுக்கு, குறைந்தது 50 பேர்களுக்காவது உணவளிப்பது என்ற திட்டத்தில் இணைந்து செயலாற்ற விரும்புபவர்கள் அல்லது பொருளுதவி செய்ய விரும்புபவர்கள் அதிரை பைத்துல்மால் குவைத் கிளைத் தலைவர் ஜெய்னுல் ஹுசைனை +965 99781286 (WhatsApp) ல் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்ட முடிவில், குவைத்தில் மரணிப்பவர்களின் ஜனாசாவை எவ்வாறு Mortuary இலிருந்து எடுப்பது  Embassy  மற்றும் Ministry யிலிருந்து clearance எப்படி வாங்குவது, குளிப்பாட்டுவது, கபணிடுவது, அடக்கம் செய்வது போன்ற எல்லா முறைகளையும் மௌலவி நிஜாமுதீன் பாகவி விளக்கிப் பேசினார். 

அதன் பின் நம் கூட வேலை செய்பவரோ, தங்கி இருப்பவரோ திடீரென்று மயங்கி விழுந்தால், விபத்தில் யாரும் மயக்க நிலை ஏற்பட்டால், அல்லது மாரடைப்பு ஏற்பட்டால், எப்படி முதலுதவி (CPR) செய்வது, அல்லது சாப்பிடும்போது அடைத்து  மூச்சுத்திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது என்று First Aid Certified Trainer பற்றி ஜெய்னுல் ஹுசைன் விளக்கினார். 

மேலும், வரும் நவம்பர் 3ம் தேதி வெள்ளியன்று அஸருக்குப்பின் பின்தாஸ் கடற்கரையில் (Fintas Beach) ஒன்று கூடுதல் (Get Together) நிகழ்ச்சி ஏற்பாடு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் குவைத் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...