Pages

Thursday, October 5, 2017

அதிரையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 05
தஞ்சாவூர் மாவட்டத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமை டெங்கு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவுறுத்திருந்தார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் ஏடிஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, அதிராம்பட்டினத்தில், இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் தலைமை வகித்து, டெங்கு ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்தார். பேரணி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, அதிரை பேருந்து நிலையம், பழஞ்செட்டித்தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையம் வந்தடைந்தது. இதில் அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், வெங்கடேசன், ரவிசங்கர், மேஸ்திரி முத்துக்குமார், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, பேரூராட்சி அலுவலகத்தில், ஏடிஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. முகாமில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பேருந்து நிலைய வர்த்தகர்கள், வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...