Pages

Tuesday, October 3, 2017

புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவையொட்டி உணவு தயாரிக்கும் பணி தீவிரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புகாரி சரீப் மஜ்லிஸ் கடந்த ஆக.22 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முஹம்மது குட்டி தலைமையில், 40 நாட்கள் வரை நடைபெறும். இதில், தினமும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவு, துஆ, திக்ரூ நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 1000 த்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மஜ்லீஸ் முடிவில் அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நாளை (அக். 04) புதன்கிழமை காலை நடைபெற உள்ளது. இதையொட்டி, நெய் சோறு உணவு தயாரிக்கும் பணி மேஸ்திரி முகமது பாருக் தலைமையில், 8 சமையல் பணியாளர்கள தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 800 கிலோ உயர்ரக அரிசியில் 6 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு ஜாவியா அருகே உள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிரத்தியோக இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமையல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மேஸ்திரி முஹம்மது பாருக் கூறியது;
'3 பேர்கள் போதுமான அளவில் உண்ணும் அளவில் மொத்தம் 6 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக 800 கிலோ அரிசி பயன்படுத்தப்பட இருக்கிறது. மொத்தம் 12 சட்டிகளில் உணவை தயாரிக்க உள்ளோம். இன்று மாலை 5 மணி முதல் சமையல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இரவு 10 மணிக்கு மேல் அடுப்பு பற்ற வைக்கும் பணி ஆரம்பமாகும். இந்த பணி தொடர்ந்து அதிகாலை 4 மணி வரை நீடிக்கும். உணவு தயாரானதுடன் பேக்கிங் செய்யும் பணிகள் தொடங்கும். இதற்காக ஜாவியா நிர்வாகக் கமிட்டியின் சார்பில் ஏராளமான தன்னார்வல இளைஞர்கள் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...