Pages

Saturday, October 7, 2017

ராஸ் அல் கைமாவில் மலையிலிருந்து விழுந்தவர்கள் உயிருடன் மீட்பு !

அதிரை நியூஸ்: அக். 07
அமீரகத்தின் சமீபத்திய புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று ராஸ் அல் கைமாவில் இருக்கும் ஜெபல் அல் ஜைஸ் எனும் மலை, இந்த மலையே அமீரகத்தின் மிக உயரமான சிகரமாக விளங்குகிறது.. இங்குள்ள மலைப்பாதையில் வாகனத்தை ஒட்டி ரசிப்பதற்கென்றே அமீரகம் முழுவதிலிழுமிருந்து ஒரு பெருங்கூட்டம் விடுமுறை தினங்களில் செல்லும்.

நேற்று (வெள்ளி) மாலை சுமார் 6 மணியளவில் தந்தை, தாய் மற்றும் மகன் என சென்ற ஒரு பாகிஸ்தானிய குடும்பத்தின் கார் ஒன்று எதிர்பாராவிதமாக மலைப்பாதையில் சறுக்கியதால் மலையிலிருந்து ஒரு கிடுகிடு பள்ளத்தில் விழுந்தனர்.

அந்தக் காரும் குடும்பமும் எளிதில் யாரும் சென்று மீட்க இயலாத பாறைப்பகுதியில் மாட்டியிருந்ததால் போலீஸ் துறையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். அந்த பாகிஸ்தானிய பெண் பலத்த கால் முறிவுடனும், தந்தையும் மகனும் காயங்களுடனும் உயிர் தப்பினர்.

இவ்விபத்தை தொடர்ந்து, மலைப்பாதைகளில் மிக கவனமாக வாகனங்களை செலுத்தும்படியும், போக்குவரத்து விதிகளை பின்பற்றும்படியும், சுய பாதுகாப்பிற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் ராஸ் அல் கைமா போலீஸ் பொது வேண்டுகோள் விடுத்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...