Pages

Friday, October 13, 2017

அதிராம்பட்டினத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி !

அதிராம்பட்டினம், அக். 13
சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு இன்று (13.10.2017) வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இப்பேரணி, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஈஸ்ட் கோஸ்ட் சாலை, திலகர் தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக மீண்டும் பேருந்து நிலையம் சென்றடைந்தது. இப்பேரணியில், 250 மேற்பட்ட அதிராம்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில், மழை மற்றும் வெள்ளம் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, வெள்ளம் வருவதற்கான அறிவிப்புகள் வந்தவுடன் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், பேரிடர் மற்றும் வெள்ளக் காலங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், தீ தடுப்பு பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. பட்டுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் பட்டுக்கோட்டை நிலைய அலுவலர் மா. மெல்கியு ராஜா தலைமையிலான குழுவினர் செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர்,

சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மை திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் உமா மகேஷ்வரி செயல்முறை விளக்க உரையை வழங்கினார்.

பேரணியின்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இப்பேரணியில், பட்டுக்கோட்டை தாசில்தார் எஸ். கே ரகுராமன், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ், பேரூராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...