Pages

Saturday, October 7, 2017

துபையில் கார் பார்க்கிங் பகுதிகளில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி துவக்கம் !

அதிரை நியூஸ்: அக். 07
துபையில் மாற்று மின்சக்தியான சூரிய ஒளி மின்சார தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக அரசு அலுவலக வாகன நிறுத்துமிடங்கள் மீது போட்டோவால்டிக் சோலார் பேனல்கள்  (Photovoltaic panels - PV) அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிறுத்தங்களுக்கு சோலார் கார்போர்ட் (Solar carports) என பெயரிடப்பட்டுள்ளன.

துபை மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான ஆணையம் (Dubai Electricity and Water Authority - Dewa) இருவேறு இடங்களில் சுமார் 902 வாகன நிறுத்தங்கள் மீது இவ்வாறான சூரிய ஒளி மின்தகடுகளை அமைத்துள்ளதன் மூலம் சுமார் 2,750 MWp மெகாவாட்பீக் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதுடன் இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 1,500 டன் கரியமில வாயு காற்றில் கலப்பது தடுக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசு பாதுகாக்கப்படும்.

மேலும், 'ஷம்ஸ் துபை இனிஷியேட்டிவ்' (Shams Dubai initiative) எனும் திட்டத்தின் மூலம் சுமார் 450 குடியிருப்பு மற்றும் வணிக வளாக கட்டிடங்களின் மீதும் அமைக்கப்பட்டு வரும் சோலார் பேனல்களின் வழியாக சுமார் 17.7MW மின்சாரமும், எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் துபையின் அனைத்துக் கட்டிடங்களின் மீதும் சூரியஒளி மின்தகடுகள் அமைக்கப்படும் என துபை மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான வாரியம் அறிவித்துள்ளது.

நமது மண்ணிலும் வீட்டுக்கு வீடு சூரிய ஓளி மின்சாரம் உற்பத்தியாகும் காலம் எப்போது வரும்?

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...