Pages

Monday, October 30, 2017

சவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு !

அதிரை நியூஸ்: அக்.30
சவுதிக்கான இந்தியத் தூதரை திடீரென திரும்பப் பெற்றுள்ளது இந்திய அரசு.

2016 ஆம் ஆண்டு முதல் சவுதிக்கான இந்திய தூதராக பணியாற்றி வருபவர் நூர் ரஹ்மான் ஷேக், இந்தியர்களின் மனங்களை குறிப்பாக தொழிலாளர்களின் தோழனாக வலம் வந்த நூர் ரஹ்மான் ஷேக்கை இந்திய அரசு திடீரென திரும்ப அழைத்துள்ளதால் மதம், இனங்களை கடந்து அனைத்து சவுதி வாழ் இந்தியர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை எழுப்பியுள்ளது.

பார்ப்பதற்கு எளிமையாகவும், பழகுவதற்கு தோழமையாகவும் திகழ்ந்த நூர் ரஹ்மான் ஷேக் இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு அந்தந்த மட்டங்களில் தீர்வுகளை தேடித்தந்தவர், சமூக வலைத்தளங்களின் வழியாக பெறும் புகார்கள் மீதும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தவர். இந்திய அரசின் திட்டங்களான சுவச் பாரத் (கிளீன் இந்தியா), பர்யதன் பர்வ் (ஒருங்கிணைந்த இந்திய சுற்றுலா) போன்றவற்றை இந்தியர்கள் மத்தியில் விளக்கி கொண்டு சேர்த்தவர்.

'70 ஆண்டு கால இந்திய சுதந்திரம்' என்ற பெயரில் சவுதியில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வந்ததும், கடந்த வாரம் சவுதியில் கேரள மாநிலம் சார்பாக நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் இவர் கலந்து கொண்டதை தொடர்ந்து மக்கள் பெருமளவில் கலந்து கொண்டது போன்ற மத்திய அரசின் கண்ணை உறுத்திய நிகழ்வுகளே இவரது உடனடி மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என சவுதிவாழ் இந்தியர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

மேட்டுக்குடிகள் முதல் குறைந்த சம்பள தொழிலாளர்கள் வரை மிக சகஜமாக, சமமாக பேசிப் பழகும் தன்மையுடைய நூர் ரஹ்மான் ஷேக் அவர்கள் பின்தங்கிய வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் ஒரு கிராமத்திலிருந்து வந்த இவர் 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிகரமாக தேறி 2003 ஆம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றி வருகிறார்.

ஆரம்பத்தில் ஜித்தாவில் இந்திய ஹஜ் மிஷனில் கவுன்சலராக பணியாற்றிவர் பின்பு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக சிறிது காலம் நியமிக்கப்பட்டவர் மீண்டும் 2016 ஆம் ஆண்டு ஜித்தாவிற்கு கவுன்சலர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுத் திரும்பியர் தனது பதவிகாலம் முழுமையடையும் முன்பே இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக, கடந்த ஹஜ் காலத்தின் போது இந்திய அரசின் சார்பாக இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கான தேவைகளை நிறைவேற்றித் தருவதில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்காக இந்தியர்களின் மனங்களையும் வென்றிருந்தார்.

Source: Saudi Gazette / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...