Pages

Thursday, October 12, 2017

துபையில் முதன் முதலாக ஹைட்ரஜன் எரிவாயு நிரப்பும் மையம் திறப்பு

அதிரை நியூஸ்: அக்.12
மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பரிக்கா பிராந்தியத்திலேயே (MENA) முதன்முதலாக துபையில் பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளான ஹைட்ரஜன் நிரப்பும் மையத்தை அல் புத்தைம் மோட்டார்ஸ் நிறுவனம் (Al Futtaim Motors) ஜப்பானின் டோயோட்டா மற்றும் பிரான்சின் 'ஏர் லிக்யூட்' ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 'துபை பெஸ்டிவல் சிட்டியில் அமைந்துள்ள அல் புத்தைம் நிறுவனத்தின் அல் பதியா ஷோரூமில்' (Al Badia Showroom) திறந்துள்ளது.

இதே நிறுவனம் தான் முதன்முதலாக துபையில் சுமார் 9 வருடங்களுக்கு முன் ஹைப்ரிட் (Hybrid Cars) எனப்படும் இரட்டை எரிசக்தியில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்தி வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஹைட்ரஜன் எரிசக்தியை பயன்படுத்தி இயங்கும் 'டயோட்டா – மிராய்' ரக கார்கள் Toyota Mirai (Japanese for “the future”) இன்னும் அமீரகத்தில் வாடிக்கையாளர் பயன்பாட்டுக்கு வராவிட்டாலும் துபையில் பரிசோதனை அடிப்படையில் மட்டும் சில கார்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த இந்த ஹைட்ரஜன் எரிசக்தி வாகனங்கள் புகையை வெளிப்படுத்தாது மாறாக தண்ணீரையும், சூட்டையும் மட்டுமே வெளியேற்றும். இந்த ஹைட்ரஜன் வாயு தனிமமே உலகின் பெரும்பகுதியில் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 3 முதல் 5 நிமிடங்களுக்குள் நிரப்பப்படும் முழு டேங்க் கொள்ளளவு ஹைட்ரஜன் எரிவாயுவை கொண்டு சுமார் 502 கி.மீ தூரம் வாகனத்தை இயக்கலாம்.

2021 ஆம் ஆண்டிற்குள் சுற்றுச்சூழலுக்கு கேடுகளை ஏற்படுத்தாத இத்தகைய பசுமை வாகனங்களை அதிக பயன்பாட்டிற்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...