Pages

Thursday, October 5, 2017

மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் !

அதிராம்பட்டினம், அக். 05
தஞ்சாவூர் மாவட்டத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமை டெங்கு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவுறுத்திருந்தார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் மற்றும் ஏடிஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ. அன்பழகன் தொடங்கி வைத்து பேசியது; 
'தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட உள்ளது. ஏடிஎஸ் கொசுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை வாரம் ஒருமுறையாவது கழுவி சுத்தம் செய்து பயன்படுத்துவுடன் கொசுக்கள் உள்ளே புகாதவாறு மூடிவைப்பது, தங்கள் வீட்டின் வெளியிலும் சுற்றுப்புறத்திலும் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வதோடு தேவையற்ற மண்பாண்டங்கள், உரல்கள், பழைய பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள கீழ் நிலை நீர் சேமிக்கும் தொட்டியை மூடுவது, போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

வைரஸ் காய்ச்சல் நோய் குறித்து எந்தவித அச்சமும் பயமும் கொள்ளத் தேவையில்லை என்றும் அனைத்து காய்ச்சல் வகைகளையும் ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட்டால், முற்றிலுமாக குணப்படுத்த முடியும். காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக எவ்வித மருத்துவமும் மேற்கொள்ளாமல் காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சைப் பெறவும்' என்றார்.

முகாமில், ஏடிஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தினை முன்னிட்டு, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பொது மருத்துவர் சுதாகர் தலைமையில் உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை யுனானி மருத்துவர் சி. ஷெரின் பேகம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

பள்ளித்தலைமை ஆசிரியர் (பொ) வெற்றிவேலன் தலைமை வகித்தார். இம்முகாமில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...