Pages

Sunday, October 22, 2017

அபுதாபியில் டிஷ் ஆண்டெனாவிற்கு எதிராக எச்சரிக்கை நோட்டீஸ் !

அதிரை நியூஸ்: அக். 22
அபுதாபியின் தொழில் நகரான முஸஃபா இன்டஸ்ட்ரியல் ஏரியா பகுதியில் நகரின் புற அழகை கெடுக்கும் வகையில் டிஷ் ஆண்டெனாக்களை நிறுவியிருந்த 63 பேர்களுக்கு எதிராகவும் மற்றும் கிழிந்து மங்கிய நிலையில் அமீரக தேசியக் கொடியை பறக்கவிட்டிருந்த 26 பேர்களுக்கு எதிராகவும் கடும் எச்சரிக்கை நோட்டீஸ்களை வழங்கியதுடன் மிகவும் மோசமாக இருந்த 10 கொடிகளையும் உடனடியாக அகற்றியது அபுதாபியின் நகரத் திட்டமிடல் மற்றும் மாநகராட்சி பணிகளுக்கான துறை. (The Municipality of Abu Dhabi City at the Department of Urban Planning and Municipalities)

அபுதாபி சட்ட எண் 2/2012 படி, தலைநகர் அபுதாபியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் அழகுடனும் வைத்திருப்பது மக்களின் கடமை. மேலும், ஒரு கட்டிடத்தின் மேல் மாடியில் அதிகபட்சம் 4 டிஷ் ஆண்டெனாக்களை மட்டுமே நிறுவ முடியும், இந்த சட்டம் தோட்டம், பால்கனி மற்றும் சுவர்களில் நிறுவுவோருக்கும் பொருந்தும். மேலும் டிஷ் ஆண்டெனாக்களின் கேபிள்கள் எக்காரணம் கொண்டும் பிறர் பார்வையில் படும் வகையில் கட்டிடத்திற்கு வெளியே தெரியக்கூடாது எனவும் ஞாபகமூட்டியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...