Pages

Thursday, October 26, 2017

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ~ கத்தார் அரசு ஒப்புதல் (முழு விவரம்)

அதிரை நியூஸ்: அக். 26
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க கத்தார் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கத்தாரில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக பல்வேறு புதிய கால்பந்தாட்ட அரங்கங்கள் மற்றும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டுமானங்களின் போது சுமார் 1,200க்கு மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் இறந்திருக்கக்கூடும் என சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் 2013 ஆம் ஆண்டின் அறிக்கை சந்தேகம் தெரிவித்துள்ளது.

கத்தாரில் நிலவும் 'கபாலா' (Kafala) எனும் நடைமுறையின் கீழ் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களுடைய வேலையை மாற்றிக் கொள்ளவும், ஊருக்குச் செல்வதாக இருந்தால் கூட முதலாளியின் தயவை எதிர்பார்த்துக் காத்திருப்பதையும் 'நவீன அடிமைத்துவம்' என வர்ணித்ததை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு டிசம்பருடன் இந்த ;கபாலா' நடைமுறைக்கு கத்தார் விடை கொடுத்திருந்தது என்றாலும் உண்மையான சீர்திருத்தங்களை கத்தார் மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு (The International Trade Union Confederation - ITUC) வலியுறுத்தி வந்தது.

கத்தாரில் சுமார் 2 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களே. இவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக கத்தார் அரசுடன் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி கீழ்க்காணும் விஷயங்களில் உடன்பாடு கண்டுள்ளன என்றாலும் இவை எப்போது நடைமுறைக்கு வரும் என தெளிவுபடுத்தப்படவில்லை.

முக்கிய ஷரத்துக்கள் வருமாறு,
1. இனப்பாகுபாடு ஏதுமின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் சீரான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்.

2. தொழிலாளர்கள் கத்தாரிலிருந்து வெளியேறுவதை முதலாளிகள் முன்புபோல் இனி தடுக்க உரிமை கிடையாது.

3. தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அடையாள அட்டைகளை வழங்கக்கூடாது, அதை அரசே ஏற்று வழங்க வேண்டும்.

4. நிறுவனங்களால் தவறான ஷரத்துக்கள் வேலை ஒப்பந்தங்களில் திணிக்கப்படாமல் இருக்க அரசே அதை மேற்பார்வை செய்ய வேண்டும்.

5. தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அவர்களாலேயே நிர்வகிக்கப்படும் கமிட்டிகளை உருவாக்கவும், செயல்படவும் அனுமதிக்க வேண்டும்

என்பது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கத்தார் தொழிற்துறை அமைச்சகம் மற்றும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்புக்குமிடையே கையெழுத்தாயின.

Source: BBC News / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...