Pages

Monday, October 16, 2017

ஓமனில் பிளாஸ்டிக் ஹல்வா கடை அதிரடியாக மூடல் !

அதிரை நியூஸ்: அக். 16
ஓமன் நாட்டின் ஹல்வா தயாரிப்புக்கள் உலகப்புகழ் பெற்றவை. இங்கு மஸ்கட்டி, தமர் (பேரீத்தம் பழம்), ஹலீப் (பால்) போன்ற பலவகையான ஹல்வாக்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் சுல்தானி எனப்படும் ஹல்வா உயர்தரமானவை, அதிக சுவையானவை.

நமது நாட்டில் கூட மஸ்கட் ஹல்வா என்ற பெயரில் தயாரித்தும், சிலர் ஓமனிலிருந்து இறக்குமதி செய்தும் விற்கின்றனர். பாரம்பரிய ஓமன் ஹல்வாவில் சீனி, பன்னீர், குங்குமப்பூ, பாதம் பருப்பு வகைகள், ஏலக்காய், முட்டை போன்றவை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

தற்போது பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் காய்கறிகள் என போலியான உணவுப் பொருட்கள் சந்தையில் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் ஓமனில் ஹல்வா தயாரிக்கும் ஒரு இனிப்பகத்தின் ஊழியர்கள் சூடான ஹல்வா தயாரிப்பின் போது பிளாஸ்டிக் வாலியை பயன்படுத்தியது வீடியோவாக 'பிளாஸ்டிக் ஹல்வா' என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

உடனடியாக களத்தில் இறங்கிய ஓமன் அதிகாரிகள் அந்தக் கடையை மூடியதுடன் பிற இனிப்பகங்களிலும் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

உருகும் இந்த பிளாஸ்டிக் வாலி சூடான ஹல்வாவுடன் கலப்பதால் அதனை உண்ணும் மக்கள் பலவித நோய்களுக்கு ஆளாவதுடன் மரணத்தையும் சந்திக்க வேண்டி வரலாம்.

https://twitter.com/Consumer_Eye/status/919186132444827650

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...