Pages

Sunday, October 8, 2017

துபையில் அரிய வகை வெள்ளை வைரம் காட்சிக்கு வைப்பு !

அதிரை நியூஸ்: அக். 08
எதிர்வரும் 2017 நவம்பர் 14 ஆம் தேதி ஜெனீவா நகரில் ஏலம் விடப்படவுள்ள அரிய, அழகிய, ஒளிசிந்தும் பெரிய வெள்ளை வைரம் ஒன்று ஹாங்காங், துபை, லண்டன் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு பின்பு ஏலம் விடப்படவுள்ளது.

இந்த வைரம் 163.41 காரட் எடையளவு கொண்டது. துபையில் எதிர்வரும் அக்டோபர் 17 முதல் 19 தேதி வரை Christie’s and De Grisogono in Dubai என்ற இடத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.

அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் ஹாங்காங் நகரில் நடைபெற்ற ஏலத்தில் அரிய இளஞ்சிவப்பு வைரம் ஒன்று 60 மில்லியன் டாலரை ஈட்டும் என எதிர்பார்த்திருந்த நிலையில் 71.2 மில்லியன் டாலரை குவித்து ஆச்சரியப்படுத்தியது.

Source: Emirates 247 / Dubai Post
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...