Pages

Sunday, October 8, 2017

அமீரகத்தில் சலுகை விலையில் விமான டிக்கெட் !

அதிரை நியூஸ்: அக். 08
அமீரகத்தின் 3 முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் துபை, ஷார்ஜா மற்றும் அபுதாபியில் அமைந்துள்ளன. இங்கிருந்து பல்வேறு சர்வதேச தடங்களுக்கு சேவையாற்றும் பல்வேறு விமான நிறுவனங்களும் அவ்வப்போது பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.

தற்போது,

ஷார்ஜாவிலிருந்து செயல்படும் ஏர் அரேபியா விமான நிறுவனம் இன்று (அக். 8) முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை குறைந்தபட்ச டிக்கெட் விலையாக திர்ஹம் 399 முதல் பல சலுகைகளை வழங்கியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்திற்கு திர்ஹம் 599 முதல் பறக்கலாம். இந்த சலுகை டிக்கெட்டுகளை எதிர்வரும் 2018 மார்ச் 31க்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

செபு பசிபிக் விமான நிறுவனம் பிலிப்பைன்சிற்கு திர்ஹம் 196க்கு அதிரடி சிறப்பு சலுகை டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த ஆஃபர் டிக்கெட் விற்பனை நாளையுடன் (அக். 9) முடிவடைகிறது.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் துபை மற்றும் அபுதாபியிலிருந்து இந்தியாவின் லக்னோ, பூனே, மங்களுர் பறக்கும் பயணிகளுக்கு திர்ஹம் 768 முதல் சலுகை கட்டண டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த மாதம் (அக்டோபர் 31) வரை இந்த சலுகை கட்டண டிக்கெட்டுக்களை வாங்குபவர்கள், டிக்கெட் வாங்கிய தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் பயன்படுத்திட வேண்டும்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...