Pages

Tuesday, October 3, 2017

டெங்கு நோய் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் டெங்கு நோய் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (03.10.2017)  நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவ்விடங்களை துப்புரவு பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்திட வேண்டும். பொது மக்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தின் நன்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி நிலவேம்பு கசாயத்தினை பொது மக்களுக்கு அதிக அளவில் வழங்கிட சுகாதாரத்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்கள்.

முன்னதாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஜெயசேகர்,  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர். ஜெயக்குமார்,  மாவட்ட மலேரியா அலுவலர் போத்திபிள்ளை, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு, சித்தா அலுவலர் டாக்டர் விஜயபாஸ்கர், மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் விஜயலெட்சுமி, நகர்நல அலுவலர்கள் டாக்டர் நமச்சிவாயம் (தஞ்சாவூர்), டாக்டர் பிரேமா (கும்பகோணம்), மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...