Pages

Thursday, October 12, 2017

உயிர்கொல்லி எய்ட்ஸ் நோயை வென்ற மணிப்பூர் ஆணழகன் !

அதிரை நியூஸ்: அக்.12
எய்ட்ஸ் நோயின் கொடூரம் பற்றியும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் சமூக அவமானங்கள் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் தான் சந்தித்த அத்தனை தடைகளை உடைத்தெறிந்திருக்கின்றார் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரை சேர்ந்த பிரதீப் குமார் சிங்.

குட்டி மாநிலமான மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 3 கி.மீ தூரமேயுள்ள கிராமத்தின் பிரதீப் குமார் சிங் கட்டுக்கடங்கா பிற இளைஞர்களைப் போலலே தரிகெட்டு திரிந்துள்ளார், மோசமான அற்ப இன்பங்கள் அத்தனையிலும் மூழ்கி ஊறியுள்ளார். விளைவு, 2000 ஆம் ஆண்டில் எய்ட்ஸ் என ஊர்ஜிதமானது.

3 ஆண்டுகள் சக மனிதர்களின் உதாசீனங்கள் மட்டுமல்ல சிகிச்சையளித்த மருத்துவர்கள், தாதிகள் கூட தீண்டாமையுடன் நடத்தியுள்ளனர். தனது வாழ்வு முடிந்துவிட்டதாகவே கருதியவருக்கு ஒரே ஆறுதல் அவரது மைத்துனி பானு தேவி மட்டுமே. பிரதீப் குமார் சிங்கை எப்படியும் நோயிலிருந்து மீட்டு பிற மனிதர்களைர் போல் சமூகத்தில் நடமாட வைக்க வேண்டும் என உறுதிபூண்டார் ஆனால் அது அத்தனை எளிய கனவல்ல...

எய்ட்ஸை வெல்ல வேண்டுமானால் முதலில் அவரது கவனம் தான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்பதிலிருந்து திசை திருப்பப்பட வேண்டும் என தீர்மானித்தவர் அதற்கான ஊன்றுகோளாக தத்தெடுத்துக் கொண்டது தான் உடற்பயிற்சி ஆனால் அது தான் தன்னுடைய வாழ்வையே மாற்றியமைக்கப் போகின்றது என்பதை அன்று உணரவில்லை. எய்ட்ஸ் நோயாளிக்கு யாருமே பயிற்சி தர முன்வராததால் புத்தகங்களை படித்து சுயமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டார்.

தொடர் உடற்பயிற்சியின் விளைவாக எய்ட்ஸ் நோயாளியான பிரதீப் குமாரை மிஸ்டர் மணிப்பூர், மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் சவுத் ஏசியா என சாம்பியன் பட்டங்களும், மிஸ்டர் வேல்டில் வெங்கலப் பதக்கமும் தேடி வந்தன. தற்போது ஆணழகன் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று மணிப்பூர் மாநில அரசின் விளையாட்டு துறை அமைச்சகத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

சூரியனை கூட பார்க்காமல் முடங்கிய 3 வருடங்களையும், மக்களின் ஏளனங்களையும், தொடுவதை கூட பாவமாக எண்ணி சிகிச்சையளிக்காமல் ஒதுங்கிய மருத்துவர்களின் செயல்களையும் நினைவுகளில் தேக்கி வைத்திருக்கும் பிரதீப் குமார் பின் தங்கிய மாநிலமான மணிப்பூரிலிருந்து பல விளையாட்டு சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என உழைக்கின்றார். மேலும், தனக்கு எய்ட்ஸ் பரவ காரணமாயிருந்த காரணிகளை விளக்கி இளைஞர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...