Pages

Tuesday, October 3, 2017

தஞ்சை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு !

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, இன்று (03-10-2017) தஞ்சாவூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 05.01.2017 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை

ஆண் வாக்காளர்கள் = 952226,  பெண் வாக்காளர்கள் = 986689,  மூன்றாம் பாலினத்தவர், = 72
       
ஆகக் கூடுதல் வாக்காளர்களின் எண்ணிக்கை = 19,38,987 ஆகும்.

06-01-2017 முதல் 02-1-02017 முடிய பெறப்பட்ட 14,436 விண்ணப்பங்களுள் தகுதி அடிப்படையில், 13,889 புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில். ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை = 6,487, பெண் வாக்காளர்கள் ழூ 7,400, மூன்றாம் பாலினத்தவர் = 2 ஆக கூடுதல் 13,889 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை  ஆண் = 1187. பெண் = 1034. மூன்றாம் பாலினத்தவர் = 1 ஆக கூடுதல் 2,222 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி. வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண் =  9,57,526, பெண் = 9,93,055, மூன்றாம் பாலினத்தவர் = 73 ஆகக் கூடுதல் = 19,50,654 ஆகும்.

மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை தஞ்சாவூர் மாவட்ட மக்கள் தொகையில் 76.38 சதவீதமாகும்,

திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதியில் 1,21,228 ஆண் வாக்காளர்களும். 1,20,239 பெண் வாக்காளர்களும், 4  மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 2,41,471, கும்பகோணம் சட்ட மன்ற தொகுதியில் 1,26,060 ஆண் வாக்காளர்களும், 1,29,292 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,55,352, பாபநாசம் சட்ட மன்ற தொகுதியில் 1,22,584 ஆண் வாக்காளர்களும், 1,25,433 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 2,48,026, திருவையாறு சட்ட மன்ற தொகுதியில் 1,25,029 ஆண் வாக்காளர்களும், 1,29,404 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,54,433, தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் 1,32,438 ஆண் வாக்காளர்களும், 1,41,158 பெண் வாக்காளர்களும், 36 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 2,73,632, ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதியில் 1,12,952 ஆண் வாக்காளர்களும். 1,17,963 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 230,916, பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் 1,12,701 ஆண் வாக்காளர்களும், 1,21,715 பெண் வாக்காளர்களும், 22 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 2,34,438, பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 1.04.534 ஆண் வாக்காளர்களும், 1,07,851 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 2,12,386 ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,57,526 ஆண் வாக்காளர்களும், 9,93,055 பெண் வாக்காளர்களும், 73 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 19,50,654 ஆகும்.

மேலும், இன்று 03-10-2017 முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2175 வாக்குச் சாவடி மையங்களிலும், வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் தாங்கள் வாக்களித்து வரும் வாக்குசாவடி மையத்திற்கு (Booth) சென்று தமது பெயர் வாக்காளர் பட்டியலில் தவறு ஏதுமின்றி சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதனை சரி பார்த்து உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற படிவம்  6- ஐ அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றாவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலரிடமே 31-10-2017 வரை அளிக்கலாம். பெயர் நீக்கம் செய்திட படிவம் 7 - ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் ஏதும் செய்யப்படவேண்டின், படிவம்-8 ஐ பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். அதே தொகுதியில் முகவரி மாற்றம் செய்யப்பட வேண்டின்,  படிவம் 8A - ல் பூர்த்தி செய்து அளிக்கலாம்.

வருகிற 08-10-2017 மற்றும் 22-1-02017 ஆகிய இரு நாட்களும் சிறப்பு வாக்காளர்கள் சேர்க்கை முகாம் நடைபெறும். அம்முகாம் நாட்களில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தொடர்புடைய வாக்காளர்களிடமிருந்து கேட்புஉரிமம் மற்றும் ஆட்சேபணைகளை  ( Claims and Objections ) உரிய படிவங்களில் பெற்றுக்கொள்ள ஆஜரில் இருப்பார்கள்.

இவ்வாய்ப்பினை தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்கள் பெயர் வாக்காளர் பட்டிலில் பிழையின்றி இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் புண்ணியமு்ர்த்தி, சரவணன், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் துரை.சந்திரசேகரன், கோவி. அய்யா ராசு, தேசியவாத காங்கிரஸ் சார்பில் கரிகாலசோழன்,  காங்கிரஸ் கட்சி சார்பில் பழனியப்பன், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வி.வினாயகம், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செந்தில்குமார் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...