Pages

Sunday, October 8, 2017

அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வுக்கூட்டம் ~ புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 08
நாம் தமிழர் கட்சி கலந்தாய்வுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி
அதிராம்பட்டினம், பேருந்து நிலையம் அருகில் பவித்ரா திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கீதா கருணாநிதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட, அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் சிறப்புரை வழங்கினார்.

கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி தஞ்சை மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளராக ஏ.ஜே ஜியாவூதீன், மாவட்ட கையூட்டு ஒழிப்பு பாசறை செயலாளராக எஸ்.முகமது மீராசாகிப், அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக சைபுதீன், செயலாளராக என்.அலாவுதீன், பொருளாளராக எம்.அப்துல் முனாப், இளைஞர் பாசறை செயலாளர் எஸ். ஹாஜா சரீப், மாணவர் பாசறை செயலாளர் எம். முகமது சமீர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், கட்சியில் புதிதாக இணைந்த உறுப்பினர்கள் 75 பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கூட்ட முடிவில் ஜெஹபர் சாதிக் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் தம்பி. கரிகாலன் உட்பட நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, நாம் தமிழர் கட்சி சார்பில், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், 58-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் துவரங்குறிச்சி, பொன்னவராயன்கோட்டை ஆகிய இடங்களில், பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...