Pages

Friday, October 13, 2017

சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் ~ விழிப்புணர்வு பேரணி !

தஞ்சாவூர் ரயிலடி நிலையத்திலிருந்து சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (13.10.2017) வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இப்பேரணி ரயிலடியிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக அரண்மனை வளாகம் அரசர் மேல்நிலைப்பள்ளியில் சென்றடைந்தது.  இப்பேரணியில் 250 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள், தனியார் மருத்துவமனை செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

பேரணியின் போது மழை மற்றும் வெள்ளம் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, வெள்ளம் வருவதற்கான அறிவிப்புகள் வந்தவுடன் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், பேரிடர் மற்றும் வெள்ளக் காலங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், தீ தடுப்பு பாதுகாப்பு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கோஷங்கள் எழுப்பப்பட்டு, பொது மக்களுக்கு விழிப்புணர்வு   நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

முன்னதாக மாநகராட்சி ஆணையர் அவர்கள் டெங்கு குறித்து சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வரதராஜ், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், செஞ்சிலுவை சங்க தலைவர் ராஜமாணிக்கம், செயலர் ஜோசப், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...