Pages

Wednesday, October 4, 2017

காதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் துறை சார்பில் முப்பெரும் விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை சார்பில், விலங்கியல் மன்ற தொடக்க விழா, இளங்கலை, முதுகலை ஆராய்சித்துறை முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழா, உலக விலங்கு தின விழா கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். விலங்கியல் துறைத் தலைவர் (பொ) எஸ். ரவீந்திரன் விருந்தினர் உரை நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத் தலைவர் ச.  சிவசுப்ரமணியன் கலந்துகொண்டு பேசியது;
'வாழ்வாதார இழப்பு, ஊடுருவி இனங்கள், மாசு மற்றும் பூச்சிக்கொல்லிகள், மக்கள் தொகை வளர்ச்சி, கால்நடை வர்த்தகம், அதிக வேட்டை மற்றும்  அதிக சேகரிப்பு போன்ற காரணங்களால் நூற்றுக்கணக்கான உயிரினங்கள் அச்சுறுத்தப்படுகின்றன. உயிரினங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி 2050 க்குள் அழிந்துவிடும் நிலையில் உள்ளது. உலகில் 900 திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் ஆபத்தில் உள்ளன. அவற்றை மனித உயிரினங்களைப் போல் நடத்தப்பட வேண்டும். அவைகளுக்கு உணவளிப்பதோடு, தேவையான இடத்தையும், அன்பையும் அளிக்க வேண்டும். விலங்குகளை மனிதர்களுக்கு சமமாகப் பாதுகாப்பதும்  அன்போடு நடத்துவதும் நம் தலையாயக் கடமையாகும். இது நவீன உலக விலங்கு தினத்தின் அடிப்படைக் கருத்து' என்றார்.

விழா ஏற்பாட்டினை, கல்லூரி விலங்கியல் மன்ற அமைப்பாளர் ஏ. அம்சத் செய்தார். விழா முடிவில் பேராசிரியர் முத்துக்குமாரவேல் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
  
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...