Pages

Monday, October 9, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் 'SMASH-17' தொழில்நுட்ப கருத்தரங்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் 'SMASH-17' என்ற பெயரில் கணினி அறிவியல் ஒருநாள் கருத்தரங்கம் நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

துவக்க விழா நிகழ்ச்சிக்கு, கல்லூரிச்செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் துவக்க விழா உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக பூண்டி ஏ.விவிஎம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஆர். சிவக்குமார் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

கல்லூரி SMASH-17 அமைப்பாளர், பேராசிரியர் என். ஜெயவீரன், SMASH-17 இயக்குநர்கள் பேராசிரியர் ஏ. சேக் அப்துல் காதர், பேராசிரியர் ஜே. சொக்கலிங்கம், உதவி பேராசிரியர் ஏ. ஹாஜா அப்துல் காதர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

முன்னதாக கல்லூரி மூன்றாம் ஆண்டு எம்சிஏ மாணவர், SMASH-17 சேர்மன்  எம். அகமது ஹசன் வரவேற்றார்.

பின்னர் தொழில்நுட்ப கருத்தரங்க நிகழ்ச்சியின் நிறைவு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி  வணிக ஆட்சியல் துறைத் தலைவர் ஓ.எம் ஹாஜா முகைதீன் சிறப்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஆன்லைன் (1. Shutter 2. Mono-Film) , ஆஃப் லைன் (1. Papyron 2. Biz-Mart 3 Moke-Up 4. Mach-Code 5. Blind-Coder 6. Quizzler ) என இரண்டு பிரிவுகளின் கீழ் 8 போட்டிகள் நடத்தப்பட்டன. விழா நிறைவில், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி, 'SMASH-17' சாம்பியன் பரிசை தட்டிச்சென்றது. தனிநபர் 'SMASH-17' சாம்பியன் பரிசை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர் ஆண்ட்ரூவ் ஜாக்கப்  தட்டிச்சென்றார்.

இக்கருத்தரங்கில் தழகத்தின் பல்வேறு பகுதிகளின் 15 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 110 பேர் கலந்துகொண்டனர்.

தொடக்கத்தில், கல்லூரி பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ்.எம் சபீக் அகமது வரவேற்றார். நிகழ்ச்சி தொகுப்பினை முன்னாள் மாணவர் எஸ்.ஜமான் ராஜிக் செய்தார். முடிவில் கல்லூரி எம்சிஏ இரண்டாம் ஆண்டு மாணவர் ஏ.எம் முகமது அன்சர்தீன் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...