Pages

Thursday, November 9, 2017

மதுக்கூர் மைதீன் கொலை வழக்கில் இதுவரையில் 10 பேர் கைது !

மதுக்கூர், நவ.09
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் மைதீன் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கூறி மேலும் 7 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

மதுக்கூர் ராமாம்பாள்புரத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் மகன் மைதீன் (எ) மதுக்கூர் மைதீன் (37). இவர் அக்.30-ம் தேதி இரவு மதுக்கூர் சிவக்கொல்லைப் பகுதியிலுள்ள இரு சக்கர வாகன பழுது பார்ப்பு நிலையத்தில் அமர்ந்து அங்கிருந்த மெக்கானிக்குடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் மதுக்கூர் மைதீனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பியது. இதில் பலத்த காயமடைந்த மைதீன் தஞ்சையிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி அக்.31-ஆம் தேதி அதிகாலை இறந்தார். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து மைதீன் கொலையில் தொடர்புடைய மதுக்கூர் இடையக்காடு பெரியார் நகரைச் சேர்ந்த எம்.ரியாவுதீன் (19), எம்.சேக் அப்துல்லா (20), மதுக்கூர் சூரியத்தோட்டத்தைச் சேர்ந்த ஏ.பெரிஸ் அகமது (21) ஆகிய 3 பேரை அக்.31-ம் தேதி கைது செய்தனர். தலைமறைவான மேலும் சிலரை தேடி வந்தனர்.

இந்நிலையில், மதுக்கூர் மைதீன் கொலையில் தேடப்பட்ட பட்டுக்கோட்டை ஆதித்தெரு எம்.உமர்முக்தர் (25), லெட்சத்தோப்பு வீ.காளிதாஸ் (22), ஏ.வி.குளத்தெரு கா.சுரேஷ்குமார் (24), நேரு நகர் எஸ்.கார்த்திக் (23), எஸ். அசாருதீன் (23), ஆர்.அரவிந்த் (23), மதுக்கூர் இடையக்காடு பெரியார் நகர் ப.சதாம் உசேன் (28) ஆகிய 7 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். இக்கொலையில் இதுவரை மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...