Pages

Thursday, November 2, 2017

கத்தார் அமெரிக்கா இடையே 1.1 மில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தம்!

அதிரை நியூஸ்: நவ.02
கத்தாருக்கும் சவுதி அரேபியா தலைமையிலான 4 அரபு நாடுகளுக்கும் இடையில் கடந்த ரமலான் மாத மத்தியிலிருந்து ராஜியரீதியலான உறவுகள் அனைத்தும் துண்டித்துத் கொள்ளப்பட்டன.

கத்தார் மீது தீவிரவாதிகளுக்கு உதவுவதாகவும், ஏமனிலும் சவுதியிலும் பஹ்ரைனிலும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் ஷியா தீவிரவாதிகளுடன் கைகோர்த்துள்ளதாகவும் கருதப்படும் ஈரானுடன் குழைந்து உறவாடுவதாகவும் இந்த அரபு நாடுகள் குற்றம்சாட்டியிருந்தன. இத்தனைக்கும் அரபு வளைகுடா பிராந்தியத்திலேயே மிகப்பெரும் அமெரிக்க ராணுவ விமானத்தளம் உள்ள நாடு கத்தார்.

2017 மே 20 ஆம் தேதி தனது முதல் வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் சவுதிக்கு வந்திருந்த போது சவுதிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அமெரிக்கா வரலாற்றிலேயே மிகப்பிரமாண்டான ஆயுத ஒப்பந்தம் 350 பில்லியன் டாலர்களுக்கு செய்து கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்களுக்குப் பின் சவுதியின் பட்டத்து இளவரசர் கட்டவிழ்த்துவிடப்பட்டவராக பல்வேறு சவுதி சட்டங்களை மாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு உதவுவதாக அண்டை அரபு நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ள கத்தாருக்கு 1.1 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளதுடன் தனது நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்று எனவும் அறிவித்துள்ளது.

கத்தாரும் சவுதி தலைமையிலான அரபு நாடுகளும் தங்களுக்கிடையேயுள்ள பிரச்சனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்க (உள்துறை அமைச்சர்) ரெக்ஸ் டில்லர்ஸன் (The Secretary of States) அறிவுரை வழங்கியுள்ளது. ஒருவேளை அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கிக் குவிக்கும் இந்த அரபு நாடுகள் சண்டையிட்டுக் கொண்டால் அழியப் போவது யார்?

வெற்றிகரமான வியாபாரியாக இருந்து திடீரென அரசியலில் குதித்து அமெரிக்கா ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் சர்வதேச அரசியலிலும் தான் ஒரு சிறந்த ஆயுத வியாபாரி என நிரூபித்துள்ளார்.

Source: AFP / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...