Pages

Saturday, November 25, 2017

3 வயதில் திருமணம் முடிக்கப்பட்ட சிறுமிக்கு 17 வயதில் ரத்து !

அதிரை நியூஸ்: நவ.25
3 வயதில் திருமணம் முடிக்கப்பட்ட ராஜஸ்தான் சிறுமிக்கு 17 வயதில் ரத்து செய்யப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த 3 வயது பிஞ்சு பெண் குழந்தை ஒருவருக்கு 2003 ஆம் ஆண்டு அவருடைய தந்தையை வற்புறுத்தி சிறுவன் ஒருவனுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது, இடையில் அவருடைய தந்தையும் இறந்துவிட்டார்.

இன்று 17 வயது பருவப்பெண்ணாக வளர்ந்துள்ள நிலையில் அவருடைய கணவர் வீட்டினர் பெண்ணை அனுப்பி வைக்கும்படி அவரது தாய்க்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தனர்.

சார்தி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கிருத்தி பாரதி என்பவருக்கு இச்சம்பவம் பற்றி தெரியவர திருமணத்தை ரத்து செய்ய வேண்டி சட்ட நடவடிக்கைகளில் இறங்கினார் இன்னொரு புறம் கணவரின் குடும்பத்தினரை சமாதானம் செய்து திருமண ரத்திற்கு ஒப்புதல் பெற்றதை தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட அந்தக் குழந்தை திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

கிருத்தி பாரதி என்பவரின் முயற்சியால் இதுவரை 34 சிறுவர் திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 1000க்கு மேற்பட்ட குழந்தை திருமணங்களை நடைபெறவிடாமலேயே தடுத்துள்ளார். தற்போது அந்த இளம்பெண் மீண்டும் படிக்கத் துவங்கியுள்ளார்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...