Pages

Saturday, November 11, 2017

தஞ்சை கண்டன ஆர்ப்பாட்டத்தில் 30 வாகனங்களில் செல்ல பொதுக்குழுவில் முடிவு !

அதிராம்பட்டினம், நவ.11
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாபர் மஸ்ஜீத் இடிப்பு தினமான டிசம்பர் 6 ஐ பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அறிவித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், தஞ்சை ரயில் நிலையம் அருகில், அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தமுமுக அதிரை பேரூர் தலைவர் எம். சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது முகமது புஹாரி, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, மாவட்டச் செயலாளர் சேக், துணைச்செயலர் எஸ்.எஸ் சேக்காதியார், இஸ்லாமிக் பிரசாரப் பேரவை அதிரை பேரூர் செயலர் சாந்தா சாகுல் ஹமீது  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், டிச.6 பயங்கரவாத எதிர்ப்பு தினத்தையொட்டி, நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை அழைக்கும் விதத்தில், விளம்பரப் பணிகளை தீவிரப்படுத்துவது, தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது, தமுமுக - மமக தோழமை கட்சிகள், சமுதாய அமைப்புகள் போன்றோரை போராட்டத்தில் பங்கேற்க அழைப்பது, தஞ்சை போராட்டத்திற்கு சுமார் 30 வாகனங்களில் செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கூட்டத்தில் தமுமுக அதிரை பேரூர் சார்பில் வாழ்வாதார உதவியாக பிலால் நகரைச் சேர்ந்த ஏழை குடும்பம் ஒன்றிற்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டன.

முன்னதாக, தமுமுக அதிரை பேரூர் செயலர் எம்.ஆர் கமாலுத்தீன் வரவேற்றுப் பேசினார். முடிவில் பொருளாளர் முகமது யூசுப் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், ஏராளமான தமுமுகவினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...