Pages

Monday, November 27, 2017

இந்தோனேஷியா பாலி தீவில் எரிமலை சீற்றம் ~ 445 விமான சேவைகள் ரத்து!

அதிரை நியூஸ்: நவ.27
அழகுமிளிறும் பாலி தீவைச் சுற்றி அச்சுறுத்தும் எரிமலைகளும் ஏராளம். அதில் கரங்காசம் என்ற பகுதியிலுள்ள அகுங் மலையிலிருந்து (Mount Agung) எரிமலை புகைகள் சுமார் 3 கி.மீ உயரத்திற்கு பீய்ச்சியடிக்கப்படுகிறது. இதனால் இதுவரை 196 சர்வதேச சேவைகள் உட்பட சுமார் 445 விமான சேவைகள் பாதித்துள்ளன. பல விமான சேவைகள் பக்கத்து தீவுகளில் அமைந்துள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. பாலி விமான நிலையம் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் தீவை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

எந்த நேரத்திலும் அகுங் மலை எரிமலை குழம்புகளை பீய்ச்சியடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எரிமலை புகையிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக முகமூடிகளும் (Face Mask) வழங்கப்பட்டு வருகின்றன. இதே மலை 1973 ஆம் ஆண்டு வெடித்தபோது சுமார் 1600 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் நாமும் பாலி தீவும்...
நமக்கும் பாலி தீவிற்கும் ஆயிரங்காலத்து உறவு ஒன்று உள்ளது. சுமார் 1,000 வருடங்களுக்கு முன் பெரும் கடற்படையுடன் கடல் கடந்து பல நாடுகளை கைப்பற்றிய சோழர் மன்னர்கள் குறிப்பாக ராஜேந்திர சோழனின் முக்கிய கடற்படைத் தளமாகவும், கப்பல் கட்டும் தலங்களில் ஒன்றாகவும் இருந்துள்ளது நமதூர் அதிராம்பட்டினம்.

வேதாரண்யம் முதல் துவங்கும் சோழர்களின் கடற்படைத்தளங்கள் நமதூர் அதிரை மற்றும் அதையொட்டியுள்ள கடற்கரை ஊர்கள் வரை நீண்டிருந்துள்ளது. இங்கிருந்து படை நடத்தி சென்றவர்களின் வாரிசுகளில் ஒரு பகுதியினர் தான் பாலி தீவு வாழ் இந்து மக்கள். காலப்போக்கில் அம்மண்ணின் மைந்தர்கள் மற்றும் பல நாட்டு மக்களுடன் இரண்டற கலந்து தமிழற்றுப்போன இனமாக தற்போது பரிமளிக்கின்றனர் என்றாலும் அவர்களிடம் இந்துமத அனுஷ்டானங்கள் பல எஞ்சியுள்ளன. அதுபோல் எத்தனையோ தமிழ் சொற்கள் மலாய் மொழியுடன் கலந்துவிட்டன.

மேலும், ஸ்ரீமஹாராஜா என்ற பட்டத்துடன் சிங்கப்புரா (Sri Maharaja of Singapura) தேசத்தை 1389 ஆம் ஆண்டு முதல் 1398 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த 'பரமேஸ்வரா' என்ற தமிழ் பெயர் கொண்ட மன்னன் ஒரு போரில் தோற்றுத் தப்பித்து ஓடி மலாக்காவில் கரையிறங்கி அங்கு 1402 ஆம் ஆண்டு மலக்காவை (Malacca) தலைநகராக கொண்டு கட்டியெழுப்பியதே மலேயா பேரரசு (Malaya) அதாவது இன்றைய மலேஷியா. பரமேஸ்வரா என்ற மன்னன் இஸ்கந்தர் ஷா என்ற இஸ்லாமிய சுல்தானாகவே மலேயா, சீனாவின் மிங் மற்றும் போர்த்துகீசியர்களில் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளார்

மேற்காணும் குறிப்புக்கள் இன்றைய தஞ்சை எனும் பண்டைய சோழ மண்ணிற்கும் இந்தோனேஷியா, சிங்கப்பூர் மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளுக்கும் இருக்கும் வாழையடிவாழை உறவுகளை அறிந்து கொள்ள ஒரளவு உதவக்கூடும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

1 comment:

  1. அரிய தகவல்களுடன் 'அதிரை நியூஸ்'.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...